Mothers Day 2023: “அம்மா அம்மா..ஆசை அம்மா..” தாய்-மகன் பாசத்தை ஆழமாக காண்பித்த கோலிவுட் படங்கள்!
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோலிவுடில் தாய்-மகனின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை பார்க்கலாமா?
உணர்வு பூர்வமான படங்களை எடுத்து அதற்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துள்ளது கோலிவுட் சினிமா. காதல்-காமெடி படங்களை விட, அம்மா-அப்பா சென்டிமன்ட் நிறைந்த பாசமிகு படங்களுக்கு மவுசு அதிகம். இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து, கோலிவுட்டில் அம்மா-மகனின் பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் சில.
“சின்னத் தாயவள்..”தளபதி
ரஜினி-மம்மூட்டி “பந்தம் என்ன சொந்தம் என்ன..” நட்பு பாராட்டி பாடிய படம், தளபதி. இப்படத்தில், சூர்யா-தேவராஜ்ஜின் ஆழமான நட்பை ரசித்த நாம், மகனை இழந்த கல்யாணி அவரை மீண்டும் பார்ப்பதற்கு படும் பாட்டினை கவனிக்க தவறிவிட்டோம். கல்யாணி கதாப்பாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்து, குழந்தை காணாமல் போனால் ஒரு தாயின் மனம் எவ்வளவு அல்லல்படும் என்பதை அழகாக கண்முன் நிறுத்தியிருப்பார். அதிலும், ஜானகி குரலில் வரும் “சின்னத் தாயவள்…” பாடல் கேட்பவரை கண்கலங்க செய்துவிடும்.
மேலும் படிக்க | மாடர்ன் லவ் சென்னை... 18 பாடல்களும் வெளியீடு - யார் யார் எந்தெந்த பாடலுக்கு இசை?
“அம்மா அம்மா..ஆசை அம்மா..”எம்.குமரன் S\O மகாலட்சுமி
அம்மா-மகனின் அழகான பாசத்தை ரசிகர்களின் மனங்களில் நங்கூரம் போல இறங்கும் வகையில் கூறிய படம் இது. இதில், தனது மகனை ஒற்றை ஆளாக நின்று படிக்க வைக்கும் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் நதியா. இவரது மகனாக வரும் ஜெயம் ரவி, வளர்ந்த பிறகு மகன் உருவில் தனது தாய்க்கு நல்ல தோழனாகவும் இருப்பார். இப்படத்தில் நதியா உயிரழக்கும் காட்சியும், “நீ செத்தா நானே உன்னை கொன்னுடுவேன் மா..” என ஜெயம் ரவி குழந்தைத்தனமாக கூறும் காட்சியும் காண்போரின் கண்களை குலமாக்கிவிடும்.
“ ஆராரிராரோ…நான் இங்கே பாட” ராம்
அம்மா கதாப்பாத்திரங்களுக்கு பெயர் போன நடிகை சரண்யா. இவர் அம்மாவாக நடித்த பல படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன. அப்படி சிறப்பாக தாய் கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்த ஒரு படம், ராம். பள்ளி ஆசிரியை சாரதாகாவாக சரண்யா எப்படி பொருந்திப்போனாரோ அதே போல ராம் கதாப்பாத்திரத்திலும் அப்படியே பொருந்திப்போனார் ஜீவா. “ஆராரிராரோ..” பாடல் எப்போது கேட்டாலும் நம்மை தூங்க வைக்கும் அழகிய தாலாட்டாக அமைந்து போனது.
“நடமாடும் கோயில் நீதானே..”பிச்சைக்காரன்
“அம்மாவுக்காக ஒருவர் பிச்சை எடுக்கும் அளவிற்கு துணிவாரா?” இந்த ஒன்-லைன் ஸ்டோரி போதும் இப்படத்தை விவரிப்பதற்கு. விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் முற்றிலும் ஹீரோவின் அம்மாவை சுற்றி மட்டுமே சுழலும் கதையாக அமைந்திருந்தது. எதிர்பாராத விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருக்கும் அம்மா சரியாக வேண்டி 48 நாள் ஒரு பணக்காரர் பிச்சைக்காரராக மாறுவதுதான் இந்த படத்தின் மையக்கரு. யாரும் இதுவரை கேட்டிராத கதை என்பதால் இப்படம் ரசிகர்களிடையே நல்ல ஹிட் அடித்தது.
“அம்மா அம்மா..நீ எங்க அம்மா..” வேலையில்லா பட்டதாரி
“திறமை இருந்தா போதும் ரகு…” இந்த ஒரு வார்த்தைத்தான் படத்தின் ஹீரோ ரகுவை கடைசிவரை நம்பிக்கை இழக்காமல் வைத்திருக்கும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு வேலையில்லா பட்டதாரி இளைஞனுக்கும் அவனது அம்மாவிற்கும் இடையேயான அழகான பாசத்தை அப்படியே தனுஷும் சரண்யா பொன்வண்ணனும் கண் முன் நிறுத்தியிருப்பர். “கண்ணே நீயும் என்னுயிர்தானே…” என வரும் வரிகள் அம்மாவை இழந்து தவிக்கும் இதயங்களுக்கு மருந்து போடும் விதமாக அமைந்திருந்தது. சரண்யா பொன்வன்னன், மகனை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத அனைத்து தமிழ் அம்மாக்களையும் கண்முன் நிறுத்தியிருப்பார்.
நந்தா
தாயின் பாசத்திற்காக பல வருடங்களாக ஏங்கும் நந்தா, அவரது மடியிலேயே மாய்வதுதான் நந்தா படத்தின் கதை. சிறுவயதிலேயே கொலை செய்து விட்டான் என்கிற ஒரே காரணத்திற்காகவே தனது பிள்ளையை கொலை காரனாக பார்க்கும் தாயாக அப்ளாஸ்களை அள்ளியிருப்பார், ராஜஸ்ரீ. தாயின் அரவனைப்பிற்காக ஏங்கும் மகனாக சூர்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படத்தில் இடம் பெற்றிருந்த சில சண்டை காட்சிகளால் படத்தில் இடம் பெற்றிருந்த அம்மா-மகன் பாசம் காணாமல் போய்விட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ