மாடர்ன் லவ் சென்னை... 18 பாடல்களும் வெளியீடு - யார் யார் எந்தெந்த பாடலுக்கு இசை?

Modern Love Chennai Songs: 'மாடர்ன் லவ் சென்னை' இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும்  உள்ளன. தற்போது அவை வெளியிடப்பட்டுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : May 13, 2023, 10:21 PM IST
  • அவை இப்போது அனைத்து முன்னணி இசை தளங்களிலும் கிடைக்கின்றன.
  • இளையராஜா, யுவன் உள்பட நான்கு முன்னணி இசையமைப்பாளர்களால் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
  • பல நட்சத்திர பாடகர்கள் இதில் பாடியுள்ளனர்.
மாடர்ன் லவ் சென்னை... 18 பாடல்களும் வெளியீடு - யார் யார் எந்தெந்த பாடலுக்கு இசை? title=

Modern Love Chennai Songs: ஜான் கார்னி தலைமையில் வெளிவந்த சர்வதேசப் புகழ் பெற்ற ஒரிஜினல் தொகுப்பான மாடர்ன் லவ் ஃபிரான்சைஸின் மூன்றாவது இந்தியத் தழுவலாக வெளிவர இருக்கும் 'மாடர்ன் லவ் சென்னை' தொடரின், மனதைத் தொடும் ஆழமான, மகிழ்ச்சியான கதைகளைக் கொண்டாடும் விதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ள இசை ஆல்பத்தை பிரைம் வீடியோ வெளியிட்டது. 

மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் பதிப்பிலும் அதே மயக்கும் இசையைக் கொண்டு வந்துள்ளனர். சென்னையை மையமாக வைத்து நகரும் வசீகரிக்கும் கதைகளின் தொகுப்பை இந்தத் தொடர் கொண்டுள்ளது, இந்தத் தொடர் உறவுகளை ஆராய்ந்து, எல்லைகளைத் தாண்டி பயணித்து உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பது உறுதி. 

இந்தத் தொடரில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன் மற்றும் ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலியான் மற்றும் பத்மப்ரியா ராகவன் உள்ளிட்ட பாடகர்கள் இணைந்துள்ளனர். இந்த இசை ஆல்பமானது அமேசான் ஒரிஜினல் தொடரின் ஒவ்வொரு கதையின் சாராம்சத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | Modern Love Chennai: மாடர்ன் லவ் வெப் தொடரில் இணையும் 6 பெரிய படைப்பாளிகள் யார் யார் தெரியுமா?

மாடர்ன் லவ் சென்னையில் ஆறு அத்தியாயங்களில் 14 அசல் பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் தொகுப்பு உள்ளது, அவை தமிழ் திரை இசைத்துறையைச் சேர்ந்த நான்கு முன்னணி இசையமைப்பாளர்களால் இயற்றப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல்பத்தில் பின்வரும் பாடல்கள் உள்ளன:

1. யாயும் ஞானமும் (டைட்டில் பாடல்) - இந்தப் பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், யுக பாரதியின் பாடல் வரிகள் மற்றும் ஷிவானி பன்னீர்செல்வம் பாடியுள்ளார்.

2. ஜிங்க்ருதா தங்கா (அத்தியாயம்: லாலகுண்டா பொம்மைகள்) - பாக்கியம் சங்கரின் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் இசையமைத்துப் பாடியுள்ளார்.

3. நெஞ்சில் ஒரு மின்னல் (அத்தியாயம்: மார்கழி) - இளையராஜா இசையமைத்து எழுதி பாடியுள்ளார்.

4. குக்குன்னு (அத்தியாயம்: காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி) – இசையமைத்தவர் ஜி.வி. பிரகாஷ் குமார், பாடல் வரிகள் யுக பாரதி மற்றும் பாடியவர்கள் வாகு மசான் & ரம்யா நம்பீசன்.

5. தீ இன்பமே (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - இளையராஜா,  இசையில், யுக பாரதி பாடல் வரிகளை எழுத, கிறிஸ்டோபர் ஸ்டான்லி பாடியுள்ளார்.

6. பேரன்பே (அத்தியாயம்: இமைகள்) - யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், யுக பாரதியின் பாடல் வரிகளில் ஷிவானி பன்னீர்செல்வம் & யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளனர்.

7. பாவி நெஞ்சே (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - யுக பாரதியின் வரிகளில் இளையராஜா இசையமைத்து பாடியுள்ளார். 

8. உறவு (அத்தியாயம்: லாலகுண்டா பொம்மைகள்) - யுக பாரதி பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் இசையமைத்து பாடியுள்ளார். பாடகி பத்மப்ரியா ராகவன் இணைந்து பாடியுள்ளார்.

9. ஆனால் (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - இளையராஜா இசையமைத்து, யுக பாரதியின் பாடல் வரிகளில் அனன்யா பட் பாடியுள்ளார்.

10. கால விசை (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - இளையராஜா இசையமைக்க, யுக பாரதியின் பாடல் வரிகளில் ஷிவானி மற்றும் பன்னீர்செல்வம் பாடியுள்ளனர்.

11. சூரியன் தோன்றுது சாமத்திலே (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - இளையராஜா இசையமைப்பில், யுக பாரதியின் வரிகளில் ப்ரியா மாலி பாடியுள்ளார்.

12. தென்றல் (அத்தியாயம்: மார்கழி) - இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி பாடியவர் இளையராஜா.

13. தேன் மழையோ (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - இளையராஜா இசையமைப்பில், யுக பாரதியின் பாடல் வரிகளில் ஷிவானி பன்னீர்செல்வம் பாடியுள்ளார்.

14. என்றும் எந்தன் (அத்தியாயம்: மார்கழி) - இளையராஜா இசை மற்றும் பாடல் வரிகள் பாடியவர் ப்ரியா மாலி.

15. காமத்துப் பால் (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - பின்னணி இசை இளையராஜா.

16. கண்ணில் பாட்டு நெஞ்சைத் தொட்ட மின்னல் (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - பின்னணி இசை இளையராஜா.

17. குட் பை (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - பின்னணி இசை இளையராஜா.

18. எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மை (அத்தியாயம்: நினைவோ ஒரு பறவை) - பின்னணி இசை இளையராஜா

மாடர்ன் லவ் சென்னை தொடரின் இசை ஆல்பத்தை சோனி மியூசிக் சவுத் மூலம் வெளியிடப்படுவதோடு உலகளவில் முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகளிலும் கிடைக்கிறது. அமேசான் ஒரிஜினல் தொடரான 'மாடர்ன் லவ் சென்னை', வரும் மே 18 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும்.  

தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள். இசை ஆல்பத்தை கேட்க இதை கிளிக் செய்யவும். டைட்டில் பாட்டின் லிரிக்கல் வீடியோவை காண இதை கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News