உலகமெங்கும் ‘தரமணி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் ராம் இயக்கிய ‘தரமணி’ என்ற படத்தில் புதுமுகம் ரவி, ஆன்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். 


‘தரமணி’ படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனால் படம் வெளியாகுவதில் தாமதம் ஆகி கொண்டே வந்தது. 


இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் அவர்கள் ‘தரமணி’  படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.


இந்த படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.