காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதிசெய்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்,  அபிர் சந்த் நாகர் என்பவரிடம் 10 கோடி கடன் பெற்றிருந்தார்.  இதை திருப்பி கொடுக்கும் வகையில், 5 கோடி ரூபாய்க்கு முரளிமனோகர் வழங்கிய காசோலை, வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிவந்தது. இதையடுத்து  முரளிமனோகருக்கு எதிராக அபிர் சந்த் நாகர் தொடர்ந்த காசோலை மோசடி வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தீர்ப்பளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்! அதுவும் இந்த தேதியிலா?



மேலும், 5 கோடி ரூபாய்க்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 7 கோடியே 70 லட்சம் ரூபாயை அபிர் சந்த் நாகருக்கு வழங்கும்படி முரளி மனோகருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த  சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.தஸ்னீம், கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.  அதேபோல கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 7.70 கோடி ரூபாயை  வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் ரஜினி நடித்துள்ள ஜெய்லர் படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். மோகன் லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்டோர் இதில் காமியோ கதாப்பாத்திரத்தில் வருகின்றனர். தமன்னா, நாயகியாக வருகிறார். நெல்சனின் பிற படங்களில் காமெடி கதாப்பாத்திரமாக இடம் பெற்றிருந்த ரெடின் கிங்ஸ்லீ இந்த படத்திலும் நடிக்கிறார். 


ஜெயிலர் படத்தில் முதலில் ரிலீஸான காவாலா பாடலை ஷில்பா ராவ் என்பவர் பாடியிருந்தார். பிரபல நடன இயக்குநர் ஜனி மாஸடரின் நடன அசைவுகளில் நடிகர்கள் நடனமாடியிருந்தனர். இந்த பாடலில் நடிகை தமன்னாதான் லீட் எடுத்து ஆடியிருந்தார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பல நடிகர் நடிகைகள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவாக பதிவிட்டு இருந்தனர். மிகப்பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் அடித்தது.  இதுவே ஜெய்லர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது.  மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது விஜய் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  Hukum-Tiger Ka Hukum என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல் வரிகள் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பிய நிலையில், ரஜினியின் பேச்சும் சர்ச்சையை கிளப்பியது.  ஜெய்லர் படத்தின் ட்ரைலர் அனைவரையும் திருப்தி அளித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.


மேலும் படிக்க | புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ