சென்னை: பிரம்மாண்டமாக திரைப்படங்கள் எடுக்கும் இயக்குநர் என்று பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். அவருடைய திரைப்படங்களுக்கு வழக்கமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார். அவருக்கு நேரமே இல்லாத போது தான் அந்த வாய்ப்பு பிற இசையமைப்பாளர்களுக்கு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இயக்குநர் ஷங்கரின் படத்துக்கு முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு, இசையமைப்பாளர் தமனுக்கு கிடைத்துள்ளது. இதை தமன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



ஷங்கரின் அந்நியன், நண்பன் என்ற இரண்டு திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தயாரிப்பில் இருந்தும் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 


இந்நிலையில், பிரபல நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்க ரஹ்மானுக்கு நேரம் இல்லாத நிலையில் இசையமைப்பாளர் யார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தமனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


தமனை ஒரு நடிகராக தனது இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகப்படுத்திய ஷங்கர், இப்போது அவரின் இசைப்பயணத்திலும் அவருக்கு தோள் கொடுக்கிறார்.


Also Read | ஷங்கர் இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 வது படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதால் இயக்குநர் ஷங்கரை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.


இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் இந்தி, தெலுங்கில் படம் இயக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை அவர் படம் இயக்க அனுமதிக்கக் கூடாது என தடைகோரி லைகா நிறுவனம் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.


அதேபோல இந்தியில் அந்நியன் படத்தை எடுக்க ஷங்கருக்கு உரிமையில்லை என்றும், அந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் அதற்கான பதிப்புரிமை தன்னிடம் மட்டுமே இருப்பதாக திரைப்படத் தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


இயக்குநர் ஷங்கருக்கு இப்படிப்பட்ட சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், அவர் இதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.


ALSO READ | அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR