ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் தங்கைகள் நான்கு பேரும் தைக்க கொடுத்த ஜாக்கெட்டை வாங்குவதற்காக வெளியே வந்த நிலையில் அப்போது ஒரு பெண்மணி தன்னுடைய கணவர் அடிக்க துரத்தி வருவதால் ஓடி வர அந்த சமயம் பார்த்து முத்துப்பாண்டி அந்த வழியாக வருகிறான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்முகம் வழியில் முத்து பாண்டியை பார்த்து மாப்பிள்ளை என்று கூப்பிட அவன் வண்டியை நிறுத்தாமல் வந்து விடுகிறான். கணவன் மனைவி சண்டை போடும் இடத்தில் முத்துப்பாண்டி வந்து இறங்க அந்த பெண்மணி அவனது காலில் விழுந்து எனக்கு விருப்பமே இல்லாமல் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க என்னை போட்டு அடிக்கிறான் என்று சொல்லி அழுதுகிறாள். 


இந்த இடத்தில் ஒரு பக்கம் சண்முகம் மறுபக்கம் நான்கு தங்கைகள் என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்க அப்போது முத்துப்பாண்டி அந்த ஆம்பளையை அடித்து பொண்டாட்டியை அடக்கி ஆள்றவன் தான் உண்மையான ஆம்பள என தன்னுடைய ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறான். 


அதோடு நிறுத்தாமல் அந்த பெண்மணியையும் அறைந்து புருஷன் அடிச்சா வாங்கிகிட்டு அடங்கி இருக்கணும் என சொல்ல இதைக் கேட்டு நான்கு தங்கைகள், சண்முகம் என எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். முத்து பாண்டியின் உண்மையான முகம் இதுதான் என தெரிய வருகிறது.  


அதன் பிறகு வீட்டுக்கு வரும் தங்கைகள் அண்ணனிடம் இதை சொல்லக்கூடாது என முடிவெடுக்கின்றனர். அதேபோல் சண்முகம் தங்கைகளிடம் இதை சொல்லக்கூடாது என அமைதியாக இருக்கிறான். வைகுண்டம் பத்திரிக்கையை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய சொல்ல நீயே பண்ணுப்பா என அப்பாவிடம் கொடுத்து விட்டு சண்முகம் அப்படியே நிற்கிறான். 


முத்துப்பாண்டி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றாக அவனுக்கு ஞாபகத்திற்கு வந்து போக ஒரு கட்டத்தில் கோவப்பட்டு பைக் எடுத்துக் கொண்டு செல்ல எதிரே வரும் பரணி வண்டியின் மீது மோதி கீழே விழுகிறான். பிறகு பரணியிடம் முத்துப்பாண்டி சொன்ன விஷயங்கள் குறித்து பேச அவள் அதுக்குத்தான் அன்னைக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். 


என் வீட்டுல அப்பா அண்ணன் என இரண்டு பேருமே ஆணாதிக்கம் பிடிச்சவங்க தான், ரத்னா இங்க வந்து கஷ்டப்படக்கூடாது தான் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நீ எங்க அப்பா பொண்ணு கேட்டதும் அவ்வளவு சந்தோஷப்பட்ட, இதுக்கு தானா என கேள்வி கேட்கிறாள். மேலும் உன் தங்கச்சி என் வீட்டுக்கு வந்தா ஒரு வேலைக்காரியா தான் இருக்கணும். ஏற்கனவே உங்க வீட்ல இருந்து எங்க அம்மா வந்து ஒரு வேலைக்காரி மாதிரி தான் இருக்காங்க என சொல்கிறாள். 


இதையெல்லாம் கேட்ட சண்முகம் ரத்னாவுக்கு இந்த கல்யாணம் வேண்டுமா? வேண்டாமா? என்று யோசிக்க தொடங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ