கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான "நாடோடிகள்" படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது "நாடோடிகள்" படத்தின் இரண்டாம் பாகம் "நாடோடிகள் 2" என்ற பெயரில் வெளிவர உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய சமுத்திரக்கனியே, இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். முதல் பக்கத்தில் நடித்த சசிகுமாரே, இரண்டாம் பாகத்தில் நடிகனாக நடிக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல "நாடோடிகள் 2" படமும் வெற்றி பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இன்று "நாடோடிகள் 2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டீசரை, நடிகர் சூர்யா வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


டீசர்:-