நாகசைதன்யா மீண்டும் திருமணம் செய்து கொள்கிறாரா?
சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா இன்னும் 6 மாதங்களில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகசைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்தில் திரைத்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த அவர்கள் 5 ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் விவாகரத்துக்கான காரணம் வெளியாகவில்லை என்றாலும், மனம் ஒன்றி பிரிவதாக கூறினர். யாரும் யார் மீதும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்ளவில்லை.
மேலும் படிக்க | 'ரஜினி- 169' ட்ராப்பா?! - ரஜினிகாந்த் சொல்வது என்ன?!
நாக சைதன்யாவுடனான திருமண உறவில் இருந்து பிரிந்த சமந்தா தீவிரமாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், கைவசம் இருக்கும் மற்ற திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். விவாகரத்து அறிவிப்பின்போது அப்செட்டில் இருந்த சமந்தா, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். அதன்பிறகு இந்தியா திரும்பி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி, அனைவரையும் கலங்கடித்தார். தற்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் சமந்தா, அடுத்தடுத்த சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவரைப்போலவே, நாக சைதன்யாவும் படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திரைத்துறை அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், சமந்தாவுடனான விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தவுடன், புதிய திருமண அறிவிப்பை வெளியிட நாகசைதன்யா குடும்பம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலர் இந்த தகவல் வதந்தி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | நேச்சுரல் ஸ்டார் நானி - நஸ்ரியா நடிப்பில் அடடே சுந்தரா டீசர் வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR