'ரஜினி- 169' ட்ராப்பா?! - ரஜினிகாந்த் சொல்வது என்ன?!

நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினி- 169 படம் குறித்து பல்வேறு வதந்திகள் உலாவந்த வண்ணம் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2022, 03:08 PM IST
  • 'பீஸ்ட்' வெளியாகும் முன்பே ‘ரஜினி- நெல்சன்’ படம் அறிவிக்கப்பட்டது.
  • ரஜினியின் 169ஆவது படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்
  • 'ரஜினி 169' குறித்து பல்வேறு வதந்திகள் உலாவந்த வண்ணம் உள்ளன.
'ரஜினி- 169' ட்ராப்பா?! - ரஜினிகாந்த் சொல்வது என்ன?! title=

சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை எடுத்த இயக்குநர் நெல்சன், அடுத்ததாக விஜய்யை வைத்து பீஸ்ட் படம் இயக்கினார். விஜய்யின் பீஸ்ட் வெளியாகும் முன்பே ரஜினியின் 169ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தையும் நெல்சனே இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பீஸ்ட் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ரஜினியின் 169 படத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளது. இதனிடையே விஜய்யின்  பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருவதால் ரஜினியின் 169ஆவது படத்தின் இயக்குநர் மாற்றப்படப்போவதாக உறுதிபடுத்தப்படாத சில தகவல்கள் வலம்வந்தன. ஆனால் படக்குழு தரப்பிலிருந்து இது தொடர்பாக எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவில் ரஜினி 169 பட அறிவிப்பின்போது வெளியான வீடியோவின் புகைப்படத்தை தற்போது இணைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்படம் கைவிடப்படவில்லை எனவும் ரஜினியின் படத்தை நெல்சன் இயக்கப்போவது உறுதி எனவும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

                                                                                        Rajini twitter

இவை ஒருபுறமிருக்க, ரஜினி 169 பற்றி சில கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளன. அதாவது இப்படத்தின் ப்ரீ - புரொக்டஷன் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ரஜினியும்- நெல்சனும் வாரத்துக்கு இருமுறை சந்தித்துக் கதை விவாதங்களில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்பட்டுவருகிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!

                                                    Rajini 169

நெல்சனின் முந்தைய படங்களான டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டது. அந்த வரிசையில் ரஜினியின் இப்படத்துக்கும் ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்படவுள்ளதாகவும் அதற்காக ‘பாஸ்’ எனும் டைட்டிலை படக்குழு முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்பட்டுவருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தின் சப் டைட்டிலாக பாஸ் எனும் வாசகம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘KGF-2’ டீம் செய்த தவறால் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள்- காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News