ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ‘நளதமயந்தி’ என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நளதமயந்தி சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நளதமயந்தி இன்றைய எபிசோட் அப்டேட்:


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நளதமயந்தி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது இறுதிப் போட்டியில் தமயந்தி அம்மா சொல்லிக் கொடுத்த கிச்சடியை செய்து போட்டியின் ஜெயிக்க நளன் அதிர்ச்சி அடைகிறான்.


மேலும் படிக்க | Leo Day 6 Box Office: 6 நாளில் 250 கோடி வசூலா? மிரட்டும் விஜய்யின் லியோ


போட்டியின் மூலம் ஜெயித்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு வந்து வட்டிக்காரன் கதிரேசன் இடம் கொடுக்க அவன் அதிர்ச்சி அடைகிறான். ஹோட்டலை கைப்பற்றலாம் என்று நினைத்த அவனது திட்டம் தவிடுபொடியாகிறது. 


அதைத்தொடர்ந்து இங்கே நலன் சோகமாக இருக்க தமயந்தி சமைத்த கிச்சடியை அவனது அம்மா வீட்டுக்கு கொண்டு வந்திருந்த நிலையில் அதை அவனுக்கு பரிமாற அதை சாப்பிட்டு பார்த்து இதை எங்கேயோ சாப்பிட்ட மாதிரி இருக்கு என யோசிக்கிறான். 


பிறகு பாட் கேஸ்டில் தமயந்தி சமையலில் போட்டியிருக்கிறதா சமையலில் இது ருசியானது இது ருசியற்றது என எதுவுமே கிடையாது. அப்படி இருக்கையில் போட்டி எப்படி இருக்கும்? இதைக் கேட்ட நலன் இன்னைக்கு உங்களுடைய பேச்சு ரொம்ப நல்லா இருந்தது என்று சொல்லி மெசேஜ் அனுப்பி உங்களுடைய நாள் எப்படி போச்சு என்று கேட்க சந்தோஷமாக போனது என பதில் சொல்கிறாள்.


அதைத்தொடர்ந்து உங்களுடைய நாள் எப்படி போச்சு என்று கேட்க நான் இன்னைக்கு எனக்கு பேட் டே என்று சொல்ல வெற்றி தோல்வி என்பது சகஜம் நான் நேற்று தோற்ற மாதிரி இருந்தது இன்னைக்கு ஜெயித்திருக்கேன் அப்படித்தான் வாழ்க்கை என்று சொல்லி நளனின் மனநிலையை மாற்றுகிறாள்‌. 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ