மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம்

Actor Vijay Sethupathi Net Worth: தமிழ் சினிமாவின் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் மக்கள் செல்வன் தற்போது விஜய் சேதுபதியின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 25, 2023, 01:18 PM IST
  • விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம்.
  • சொத்து மதிப்பு மதிப்பானது கிட்டத்தட்ட 140 கோடி.
  • தமிழ்நாடு முழுவதும் மதிப்புமிக்க சொத்துக்கள் உள்ளன.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு செல்வமா? இதோ சொத்து மதிப்பு விவரம் title=

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு விவரம்: தன் இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து விபரம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. அதன் விவரத்தை இங்கே பார்ப்போம்.

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி:
கோலிவுட்டில் கடின உழைப்பிற்கு பெயர் போன நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். வழக்கமான ஆக்ஷன் ஹீரோ போல இல்லாமல் யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன் போன்ற இவரது தோற்றம் பல பெண்களை கவர்ந்தது. முன்னணி ஹீரோக்களின் படங்களில் சைட் ரோலில் நடித்து ஓரிரண்டு வசனங்களுடன் விடைப்பெற்று கொண்டிருந்த விஜய் சேதுபதி, இன்று பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பயங்கர வில்லனாக நடித்து வருகிறார். 

வில்லனாக உருவான நடிகர் விஜய் சேதுபதி:
நடிகர் விஜய் சேதுபதி, முதன் முதலாக பயங்கர வில்லனாக நடித்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘பவானி’ எனும் கதாப்பாத்திரத்தில் வந்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் இதற்கு முன்னரே இவர் ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியே இவருக்கு ‘விக்ரம்’ படத்தலும் ‘சந்தனம்’ எனும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வாயப்பு கிடைத்தது. தற்போது அதையே பயன்படுத்திக்கொண்டு பாலிவுட் வரை சென்றுவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் வெளியா ஜவான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.

மேலும் படிக்க | அடுத்த பிசினஸ்.. புதிய நாப்கின் தொழிலை ஆரம்பித்த நயன்தாரா

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள்:
தற்போது நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் படங்களை விட பிற மொழி படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். அந்தவகையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை பாகம் 2' படத்தில் நடித்து வருகிறார். விடுதலை படத்திற்கு பிறகு வெற்றிமாறனுடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார், ஆனால் அந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவில்லை, பொன்ராம் இயக்குகிறார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் 'மகாராஜா', 'காந்தி டாக்ஸ்' மற்றும் 'மெர்ரி கிறிஸ்மஸ்' படங்கள் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம்:
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி, சொத்து விபரம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி இறுதியாக நடித்து முடித்த திரைப்படமான ஜவான் திரைப்படத்திற்கு 21 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் சேதுபதியிடம் வட சென்னை, கீழ்ப்பாக்கம் மற்றும் எண்ணூரில் மூன்று ஆடம்பர வீடுகள் உள்ளன. அவருக்கு தமிழ்நாடு முழுவதும் மதிப்புமிக்க சொத்துக்கள் உள்ளன.

இதுதவிர, நடிகர் விஜய் சேதுபதியிடம் பல விலையுயர்ந்த சொகுசு கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மதிப்பானது கிட்டத்தட்ட 140 கோடி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | “மூடிக்கிட்டு இருக்கனும்” சிவகார்த்திகேயன்-டி.இமான் சர்ச்சை-சூடாக பேசிய பிரபலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News