மிகுந்த எதிர்பார்புகளுக்கு இடையில் வெளியானது "நரகாசூரன்" டீசர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"துருவங்கள் பதினாறு" பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் "நரகாசூரன்". 


இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி நாயகனாக நடிக்கின்றார். மேலும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் "ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்" மற்றும் "ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்" இணைந்து இத்திரைப்படத்தினை தயாரிக்கிறனர். 


மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், "மாநகரம்" சந்தீப் கிஷன், ஸ்ரேயா, "மீசைய முறுக்கு" ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகுகி வருகின்றது. 



சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள "நரகாசூரன்" ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது!