தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் கடைசியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இரஞ்சித் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படமானது பெரும் பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் பீரியட் படமாக உருவாக இருக்கிறது. இதன் பூஜை சமீபத்தில் நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே இரஞ்சித் காதல் களத்தை தேர்ந்தெடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்று முழுக்க முழுக்க காதல் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்த துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக நடித்த ஷபீர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வழக்கமாக பணியாற்றும் குழுவோடு இல்லாமல் புதிய தொழில்நுட்ப குழுவோடு களமிறங்கியிருக்கிறார் பா.இரஞ்சித். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


 



இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் ரங்கராட்டினம் என்ற சிங்கிள் பாடல் இன்று வெளியானது. பாடலை பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். டென்மா இசையில் பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள அனைத்தும் தோன்றியிருக்கின்றனர். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.


 



நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 6ஆம் தேதி வெளியானது. இந்தப் படமானது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | விருமன் பஞ்சாயத்து ஓவர் - வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர் சினேகன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ