கோலிவுட் நட்சத்திரங்களான நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதியன்று சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.  இதில் சில முக்கியமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர், பொதுமக்களுக்கு திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.  இருப்பினும் இவர்களது திருமணத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விக்ரம் படத்தில் நடித்ததற்கு சூர்யா பெற்ற சம்பளம்!


விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஜோடி 2015ம் ஆண்டு வெளியான 'நானும் ரவுடி தான்' படத்திலிருந்து இருவரும் காதல் உறவில் இருந்துவந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.  இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இருந்தே இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கிவிட்டனர்.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.  தற்போது இந்த நட்சத்திர ஜோடி முதன்முதலாக எந்த இடத்தில் சந்தித்து கொண்டார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்கவைக்க வேண்டும் என்று எண்ணவில்லையாம்.  நயன்தாராவிற்கு படத்தின் கதை பிடித்துப்போனதால் அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார், இது நயன்தாராவிற்கு சிறந்த படமாக அமைந்தது.



மேலும் நயன்-விக்கி ஜோடி இருவரும் படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக சந்தித்துக்கொள்ளவில்லை.  படத்தின் கதையை நயன்தாராவிடம் சொல்ல விக்னேஷ் சிவன் சென்றிருக்கிறார்.  2015ம் ஆண்டு ஒரு பிரபல தனியார் ஹோட்டலில் விக்னேஷ் சிவன், நயன்தாராவை சந்தித்து இந்த கதையை கூறியிருக்கிறார்.  இவர்கள் முதன்முறையாக சந்தித்து கொண்ட அதே ஹோட்டலில் தான் தற்போது திருமணத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 'விக்ரம்' படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR