விக்ரம் படத்தில் நடித்ததற்கு சூர்யா பெற்ற சம்பளம்!

'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 6, 2022, 02:22 PM IST
  • விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
  • அதிக வசூல் செய்த படங்களின் இடத்தை பிடித்துள்ளது.
  • சூர்யாவின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
விக்ரம் படத்தில் நடித்ததற்கு சூர்யா பெற்ற சம்பளம்!  title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படம் நல்ல விமர்சனங்களையும், அதிக வசூலையும் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொன்டு இருக்கிறது.  இதனை முழுமையாக கமலின் பாடம் என்று சொல்லிவிட முடியாது, ஒவ்வொரு நடிகருக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.  அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடங்களே திரையில் தோன்றும் சூர்யாவின் நடிப்பு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  சமூக ஊடகங்களில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.  சூர்யா கடினமாக உழைப்பவர் என்பவர் அனைவர்க்கும் தெரியும், இந்த படத்தின் மூலம் இதுவரை யாரும் கண்டிடாத அவரின் நெகட்டிவ் கதாபாத்திரத்தை திறமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

Surya

மேலும் படிக்க | கமலுக்கும், மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன் - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

'விக்ரம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவை நடிக்கவைக்க எண்ணிய இயக்குனர் லோகேஷ் அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தை பற்றி சூர்யாவிடம் கூறியதும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சில திரைவட்டார செய்திகள் தெரிவிக்கிறது.  இந்த படத்தில் கமல்ஹாசனுடன் அதிகமான அளவு சூர்யா நடிக்காவிட்டாலும், அவருடன் இணைந்து பணியாற்றுவதையே ஒரு பெருமையாக எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் சூர்யா.  ஏற்கனவே சூர்யாவை தான் கடைசி நிமிடத்தில் தான் சந்தித்தாகவும், அப்போது அவர் வேறொரு கமிட்மெண்ட்டுக்காக விமானம் பிடிக்கும் அவசரத்தில் இருந்தார் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யா எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பர் என்கிற கேள்வி பொதுவாக எல்லாரிடமும் எழுந்திருக்கும், ஆனால் தற்போது சூர்யாவின் சம்பளம் குறித்து வெளியான தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அதாவது உலகநாயகனுக்கான மரியாதை தரும் விதமாக  'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக சூர்யா எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதே சமயம் 'விக்ரம் 3' சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இப்படம் நகரும் என்றும்,  அதில் அவர் கமல்ஹாசன் மற்றும் ஃபஹத் பாசிலுக்கு எதிராக இருப்பர் என்றும், 'கைதி'யில் இருந்து டில்லியாக கார்த்தி மீண்டும் இந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | முடிவை மாற்றிய உதயநிதி - உற்சாகத்தில் உடன் பிறப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News