AK62 படத்திற்கு முன்னாள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம்?
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா `ஏகே 62` படத்திற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திரைத்துறையில் காதலித்து வரும் பலரும் திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர், நானும் ரவுடி தான் படத்திலிருந்து காதலிக்க தொடங்கிய இருவர்க்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சில வாரங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு சென்ற நயன்தாரா நெற்றியில் குங்குமம் இருக்கும் காட்சி இணையத்தில் வைரலானது, இதனை கண்ட ரசிகர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
மேலும் படிக்க | KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2: காரணம் தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க!
இந்நிலையில் இந்த ஜோடி 'ஏகே 62' படத்திற்கு முன்னர் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதால், அவர் 'ஏகே 62' பட வேலைகளில் பயங்கர பிஸியாகிவிடுவார், அதனால் அப்படத்தின் பணிகளை தொடங்குவதற்கு முன் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அநேகமாக இந்த ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடக்கலாம், மேலும் தங்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் இவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற போகிறதா அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என குறிப்பிட்ட நபர்களை வைத்து நடத்த போகிறார்களா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. தற்போது இவர்கள் அடிக்கடி பல பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருகின்றனர், திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று இருவரும் ஆசி பெற கோவில்களுக்கு சென்று வருவதாக செய்தி வட்டாரங்கள் கூறுகிறது. கேரியரை பொறுத்தவரை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் ஏப்ரல்-28ம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க | கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR