தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நயன் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறார். இருப்பினும் தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும் தற்போது தமிழ் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் அவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது போராட்ட குணத்திற்காகவே பலர் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அதற்கு தகுந்தவாறு கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார்.



இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு தற்போது இருவரும் ஒன்றாக இருக்கின்றனர்.


மேலும்  படிக்க | விக்ரம் 3 - இந்தியன் 2 அப்டேட்டை கொடுத்த கமல்ஹாசன்


இந்தச் சூழலில் அவருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் நயனும், விக்னேஷ் சிவனும் உற்சாகமாக இருக்கின்றனர். சமீபத்தில்கூட கும்பகோணம் சென்ற நயன் விக்னேஷின் குல தெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டார்.



இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் நயனும், விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டனர். அப்போது இரண்டு பேரிடமும் திருமணம் குறித்த பேச்சு கொடுக்கப்பட்டது.


மேலும் படிக்க | ‘ராஜா கைய வச்சா அது strange-ஆ போனதில்ல..’ - வைரலாகும் மிரட்டலான Stranger Things தீம்!


அதற்கு பதிலளித்த நயன்தாரா, “நிறைய பார்த்தாச்சு இது ஒரு தொடக்கம்தான்” என பதிலளித்தார். அவரது இந்த பதில் தற்போது வைரலாகிவருகிறது. 


மேலும், வாழ்க்கையில் தான் சந்தித்த தோல்விகளையும், வலிகளையும் நயன் தாரா இந்த பதில் மூலம் மிகவும் பக்குவமாக கடந்திருக்கிறார் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR