பிரபல அமெரிக்க வெப் சீரீஸான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸுக்கு இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. 2016, 2017 மற்றும் 2019 என வெளிவந்த நிலையில் இதன் அடுத்த பாகமான 4ஆம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
அறிவியல் புனைவு ஹாரர் டிராமா ஜானரில் அமைந்த இந்த சீரீஸின் 4ஆம் பாக முதல் 8 நிமிடக் காட்சி அண்மையில் வெளியிடப்பட்டு கவனம் பெற்றது. டஃபர் பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இது நாளை முதல் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கிலும் இத்தொடர் வெளியாகவுள்ளது.
இதனிடையே, இந்திய ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு முயற்சிகளை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவை வைத்து இதற்கு தீம் மியூசிக் ப்ரோமோ ஒன்று உருவாக்கியுள்ளனர்.
இளையராஜாவின் பின்னணி இசையில் உருவான நான்காவது சீசனுக்கான முதல் அத்தியாயத்தின் தீம் மியூசிக் ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் வழக்கமான தீம் இசையுடன் தனது தனித்துவமான இசையைக் கலந்து இந்தத் தீம் மியூசிக்கை அவர் உருவாக்கியுள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில், "மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தீம் வெர்ஷன், நம் உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது" என பதிவிடப்பட்டு , இந்த ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வெறும் இசை மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் இளையராஜா தனது இசைக்குழுவுடன் இசையமைப்பதுபோலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | தவிர்க்க முடியாத தனிப் பெருங்கலைஞன்- # HBD கவுண்டமணி!
"மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தீம் வெர்ஷன், நம் உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது" எனத் தலைப்பிட்டு, நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் இந்த ப்ரோமோ வீடியோவினை வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் ‘ராஜா கைய வச்சா... ஸ்ட்ரேஞ்சா போனதில்ல’ என கமெண்ட் செய்து அதனை முகப்பு கமெண்ட் வரிசையிலும் வைத்துள்ளது. இளையராஜாவின் மிரட்டலான இந்த தீம் மியூசிக் ப்ரோமோவை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க | ‘DON’ இத்தனை கோடி வசூலா! - படக்குழுவே வெளியிட்ட புதிய தகவல் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR