தனது காதலன் பிறந்த நாளுக்கு லேடி சூப்பர்ஸ்டார் செய்த செலவு எவ்வளவு தெரியுமா?
நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சுமார் 25 லட்சம் செலவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..!
நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சுமார் 25 லட்சம் செலவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..!
தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமான காதலித்து வரும் இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து மற்றவர்களை உசுப்பேத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஊரடங்கால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தமுடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு ஓணம் கொண்டாட நயன்தாராவின் வீட்டிற்க்கு இருவரும் தனி விமானத்தில் சென்றனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
ALSO READ | See Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்!
தற்போது கொரோனாவால் படபிடிப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி கோவாவிற்கு சென்ற இந்த காதல் ஜோடி விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினர். தற்போது, விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நயன்தாரா எவ்வளவு செலவு செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்று ஒரு நாளைக்கு மட்டும் கோவா நட்சத்திர விடுதியில் நயன் செலவு செய்த தொகை ரூ.25 லட்சம் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது.