விக்னேஷ் சிவனை சைக்கோ என்று திட்டிய நயன்தாரா!
இயக்குனர் விக்னேஷ் சிவனை அவரது காதலியும் நடிகையுமான நயன்தாரா சைக்கோ என்று திட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன். 2015ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இவர் நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த பட பணிகளின் போது தான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதிலிருந்து இருவரும் ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடுவது, கிறிஸ்துமஸ் கொண்டாடுவது, அவுட்டிங் செல்வது என சுற்றி திரிந்தனர், அந்த புகைப்படங்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் வட்டமடித்து வந்தது.
மேலும் படிக்க | சமந்தா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நாக சைதன்யா!
இந்நிலையில் நயன்தாரா, தன்னை நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் திட்டியதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவருக்குமிடையே நெருக்கமான காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் நயன்தாராவை, விஜய் சேதுபதியுடன் அதிகமாக நெருக்கமாக இருக்குமாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார், அவர் சொன்னபடியே நயன்தாராவும் மிக நெருக்கமாக நின்றுள்ளார். அப்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை பார்த்து நான் இவ்வளவு நெருக்கமாக இவர்கூட இருக்கேனே உனக்கு இது ஓகேவா என்று கேட்டிருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் எனக்கு இதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று கூலாக பதிலளித்துள்ளார், இதனை கேட்ட நயன்தாரா அவரை நீ ஒரு சைக்கோ என்று கூறி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இவர்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்தது. தற்போது விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து 'ஏகே62' படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு முன்னரே இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும், திருமண அதிகாரபூர்வ தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என்றும் செய்திகள் வெளியானது. அதற்கு முன்னரே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒன்றாக கோவிலுக்கு சென்ற போது நயன்தாரா நெற்றில் குங்குமம் வைத்திருந்தது இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா என்கிற கேள்வியை எழுப்பி வந்தது. கடந்த சில தினங்களுக்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான காதுவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR