சமந்தா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நாக சைதன்யா!

நடிகை சமந்தாவின் பிறந்தநாள் தினத்தன்று நடிகர் நாக சைதன்யாவின் முதல் வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2022, 03:19 PM IST
  • சமந்தாவிற்கு நேற்று பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
  • இதே நாளில் நாகசைதன்யா வெப் சீரிஸ் அறிவிப்பும் வந்துள்ளது.
  • மேலும் பல தொடர்கள் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
சமந்தா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நாக சைதன்யா! title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தாவிற்கு நேற்றைய தினம்(ஏப்ரல்-28) பிறந்தநாள் நடந்து முடிந்தது, அதே நாளில் அவர் நடிப்பில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யா அதே சமந்தா பிறந்தநாளன்று ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதாவது அவர் நடிக்கும் முதல் வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.  

மேலும் படிக்க | ஆச்சார்யா படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

அமேசான் பிரைமின் 'இந்தியா' நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தான் நாக சைதன்யா நடிக்கும் வெப் சீரிஸ் லான்ச் செய்யப்பட்டது.  இந்த திகில் கதையம்சம் நிறைந்த சூப்பர்நேச்சுரல் வெப் சீரிஸின் பெயர் 'தூதா'.  ஏற்கனவே இந்த வெப் சீரிஸ் ஒரு திகில் தொடர் என்று கூறப்பட்ட படியே இந்த தொடர் அமைந்துள்ளது.  இதில் நாக சைதன்யா மற்றும் மலையாள நடிகை பார்வதி திருவொத்து ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  விக்ரம்.கே.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிசனது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் கிடைக்கும்.

 

நாக சைதன்யாவின் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாவது போலவே அதற்கு முன்னர் சமந்தாவும் அந்த ஓடிடி இயங்குதளத்தில் கால் பதித்தார்.  இவர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ஃபேமிலி மேன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  அதேபோல தற்போது நாக சைதன்யாவும் ஓடிடியில் தடம் பதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சமந்தாவை போல ஐவரும் இதன் மூலம் ஜொலிப்பார் என்று கூறப்படுகிறது.  அதிலும் இந்த வெப் சீரிசுக்கான அறிவிப்பு சமந்தா பிறந்தநாளன்று வெளியானது வெளியானது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்புகள் வெளியானது.

 

[Credits: Rajadurai Kannan]

மேலும் படிக்க | சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் சமந்தா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News