விஜய் ஹீரோயினுடன் டான்ஸ் ஆடிய நெல்சன் திலீப்குமார்
பீஸ்ட் தெலுங்கு புரோமோஷனில் பூஜா ஹெக்டேவுடன் நெல்சன் திலீப்குமார் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.
பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் இப்படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே படத்துக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லையாம். அந்தளவுக்கு பீஸ்ட் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் படிக்க | பீஸ்ட் Girl-ன் காஸ்டிலி போட்டோஸ் - பூஜா ஹெக்டே லேட்டஸ்ட்
தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பீஸ்ட் டிக்கெட் முன்பதிவுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக ஹைதராபாத்தில் டிக்கெட்டுகளை ரசிகர்களை போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கியுள்ளனர். அதேநேரத்தில் சன்பிக்சர்ஸ் தரப்பில் புரோமோஷன் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பீஸ்ட் தெலுங்கு புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது படம் குறித்து நெல்சன் மற்றும் பூஜா ஹெக்டே பேசும்போது, அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடுமாறு ரசிகர்கள் கேட்டனர். ரசிகர்களின் கோரிக்கையை மீறா முடியாமல் இருந்ததால் பூஜா உடனே அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடத் தொடங்கினார். இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வேடிக்கை பார்த்தனர்.
ஆனால் பூஜா ஹெக்டே, அனிரூத்தை வலுக்கட்டாயமாக நடனமாட அழைத்தார். அனிரூத்தும் அரபிக்குத்து பாடலின் Signature ஸ்டெப்களை போட்டார். அவர்கள் ஆடுவதைப் பார்த்து நெல்சன் திலீப்குமாரும் டான்ஸில் ஐக்கியமானார். ஒருகட்டத்தில் நெல்சன் நிற்க, அனிரூத் ஜாலியாக ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | மாஸ் காட்டும் அடுத்த அப்டேட்!- ரியல் ‘Beast mode’ ஸ்டார்ட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR