கோலமாவு கோகிலா என்ற வித்தியாசமான கதையம்சத்துடன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். அதற்கு முன்பு சின்னத்திரையில் பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். நயன்தாராவை வைத்து இயக்கி இருந்த நகைச்சுவை கலந்த திரில்லர் படமான கோலமாவு கோகிலா மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கியிருந்தார். டார்க் காமெடியை மையமாக வைத்து உருவாகியுருந்த இப்படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய சாதனை படைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கேஜிஎப் 2 படத்தால் வேகம் காட்டும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2!


டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. டாக்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்த போதிலும் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்களும் பீஸ்ட் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு வந்த விமர்சனங்களின் எதிரொலியால் நெல்சன் - ரஜினி படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. நெல்சனிற்கு பதிலாக அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமியை இயக்குனராக நியமித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 



கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இதனால் ரஜினி அடுத்ததாக நடிக்கும் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பீஸ்ட் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களை காரணமாக ரஜினி நெல்சனை அடுத்த படத்தின் இயக்குனரின் இருந்து மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தற்போது இன்று காலையிலிருந்து தலைவர் 169 படத்தில் இருந்து நெல்சன் வெளியேறிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனாலும் இவையெல்லாம் பொய்யான தகவல் என்றும் படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அடுத்த ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க | 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள நஸ்ரியா!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR