இன்று ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!
ஜூலை-29ம் தேதியான இன்றைய தினம் பல்வேறு ஓடிடி தளங்களில் பிறமொழி படங்கள் சில வெளியாகுகின்றது.
கிரன்ராஜ் இயக்கத்தில் கன்னட மொழியில் உருவான சாகசம் நிறைந்த காமெடி திரைப்பாமான '777 சார்லி' திரைப்படம் ஜூலை-29ம் தேதியான இன்றைய தினம் வூட் ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது. ஜி.எஸ்.குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி தயாரித்திருக்கும் இந்த படத்தில் சார்லி, ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா, ராஜ்.பி.ஷெட்டி போன்ற பள்ள நட்சத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். நாயுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரு உன்னதமான நட்பை காமிக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது, நாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் நோக்கில் கதாநாயகன் செய்யும் செயல்கள் இப்படத்தின் கதையாய் அமைந்துள்ளது.
மேலும் படிக்க | பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
இதனைத்தொடர்ந்து 'குட் லக் ஜெர்ரி' படமும் இன்றைய தினம் ஹாட்ஸ்டாரில் வெளியாகுகிறது. நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கோலமாவுக்கு கோகிலா படத்தின் அதிகாரபூர்வ ஹிந்தி ரீமேக் தான் இந்த 'குட் லக் ஜெர்ரி' படம். இந்த படத்தில் நயன்தாரா கதாப்பாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார், மேலும் இவருடன் நீரஜ் சூட், தீபக் டோப்ரியால், மிதா வசிஷ்ட் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ளார்.
அடுத்ததாக இந்து.வி.எஸ் இயக்கத்தில் மலையாள மொழியில் உருவாகியுள்ள '19(1)(a)' திரைப்படம் இன்றைய தினம் ஹாட்ஸடாரில் வெளியாகுகிறது. இந்த படத்தை ஆண்டோ ஜோசப் மற்றும் நீட்டா பின்டோ தயாரித்துள்ளனர். மார்க்கோனி மத்தை என்கிற மலையாள படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த மலையாள படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார், மேலும் இப்படத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரீகாந்த் முரளி, இந்திரன்ஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.
அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேப்பர் ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் இன்றைய தினம் ஜீ5 தளத்தில் வெளியாகுகிறது. இந்த தொடரில் காளிதாஸ், தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், ரேணுகா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இதே தினத்தில் ஹரி குல்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித்திரைப்படமான 'ஷிகாரு' ஆஹா தளத்தில் வெளியாகுகிறது. ஸ்ரீ சாய் லக்ஷ்மி கிரியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | படிப்புங்குறது பிரசாதம் மாதிரி - வெளியானது வாத்தி டீசர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ