பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பிரியங்கா சோப்ராவின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 70 மில்லியன் யூஎஸ்டி இருக்கும் என்று கூறப்படுகிறது, இதன் இந்திய மதிப்பு ரூ.559 கோடி ஆகும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 29, 2022, 09:21 AM IST
  • 2002ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா.
  • பாலிவுட்டில் 2003ல் 'தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை' படத்தின் மூலம் பிரபலமானார்.
  • பிரியங்கா சோப்ராவின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 70 மில்லியன் என்று கூறப்படுகிறது.
பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?  title=

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.  தனது நடிப்பு திறமையால் இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கும் நடிகை இன்று அவரது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற இவர் தனது திரைப்பயணத்தை முதலில் நடிகர் விஜய்யுடன் தொடர்ந்தார், கடந்த 2002ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் 2003ல் 'தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை' படத்தின் மூலம் பிரபலமானார்.  இவர் நடிப்பில் மட்டும் டாப் லிஸ்டில் இல்லை, ஆடம்பரமான வாழ்க்கை முறை, சொத்து மதிப்பு என அதிலும் டாப் லிஸ்டில் தான் இருக்கிறார்.

priyanka chopra

மேலும் படிக்க | பாலிவுட்டை ஆளும் தென்னிந்திய படங்கள்! காரணம் அடுக்கும் அனுராக் காஷ்யப்

பிரியங்கா சோப்ராவின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 70 மில்லியன் யூஎஸ்டி இருக்கும் என்று கூறப்படுகிறது, இதன் இந்திய மதிப்பு ரூ.559 கோடி ஆகும்.  இவர் ஒரு படத்திற்கு ரூ.14 கோடி சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது, இதன்மூலம் இவர் இந்தியாவின் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.  அதோடு இன்ஸ்டாகிராமில் இவருக்கு 79.2 மில்லியன் பாலோவர்ஸ்கள் உள்ளனர், தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றிற்கு இவர் ரூ.3 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.  இதுதவிர இவர் சில நிறுவனங்களின் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார், ஒரு விளம்பரத்துக்கு இவர் ரூ. 4 முதல் ரூ.10 கோடி வரை வாங்குகிறாராம்.  Bumble, Garnier, Appy Fizz, Colgate, Schmitten, Pantene போன்ற முன்னணி நிறுவனங்களின் அம்பாசிடராக உள்ளார்.

priyanka chopra

நியூயார்க்கில் ஹோம்வேர் பிராண்ட் 'சோனா ஹோம்', நியூயார்க்கில் உள்ள சோனா உணவகம், ஆடை லேபிள் போன்றவற்றில் பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளார்.  பிரியங்கா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கின் விலையுயர்ந்த பகுதியான என்சினோ பகுதியில் ஒரு அழகான மாளிகையை வாங்கியுள்ளனர்.  இதன் மதிப்பு சுமார் 20 மில்லியன் யூஎஸ்டி (ரூ.144 கோடி) ஆகும்.  இதுதவிர அவர் நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் வருவதற்கு ஏற்ற வகையில் மும்பையில் ஒரு வீடும் வாங்கியுள்ளார், மேலும் விடுமுறையை கழிக்க கோவாவிலும் நிறைய சொத்துக்களையும் வாங்கியுள்ளார்.  

priyanka chopra

மேலும் இவரது ஆடம்பர வாழ்க்கை முறையில் பல வாகன கலெக்ஷன்களும் உள்ளது.  அதில் பிஎம்எஸ் 5சீரிஸ், ஆடி கியூ7, மெர்சிடஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் மற்றும் இ க்ளாஸ், மெர்சிடஸ் மேபாச் எஸ்650 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கிறார்.  சில அறிக்கைகளின்படி, இந்தியாவில் முதன்முறையாக ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய நடிகையை இவர்தான் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News