MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக  நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.
 
வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான  காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக,  இப்படம் உருவாகிறது.
 
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசியதாவது..“அமீர் சாருக்கு ரசிகன் நான் அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் சாம் என் நீண்ட கால நண்பர். கண்டிப்பாக  ஒரு அழகான படத்தைத் தருவார். அவருக்கு என் வாழ்த்துக்கள். நான் மிமிக்ரி கற்றுக்கொள்ளும் போது எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது கோபி அண்ணன். அவர் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சி” 


மேலும் படிக்க | விஜய் இல்லாமல் நடைபெற்ற அவரது மகன் சஞ்சய் படத்தின் பூஜை!


நாயகி தேவிகா பேசியதாவது, “இது என்னுடைய 4 வது தமிழ்ப்படம். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை ஆசீர்வாதமாக நினைக்கிறேன். மிக நல்ல கதாப்பாத்திரம், எனக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  
நாயகன் தேவ் பேசியதாவது, “எங்களை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இது தமிழில் எனக்கு மூன்றாவது படம், இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இயக்குநர் கதை சொன்ன போது, எனக்குப் பிடித்திருந்தது ஆனால் அவர் தயங்கினார், ஆனால் இரண்டு நாள் கழித்து நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவேன்” என்று கூறினார். 


இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்‌ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.


மேலும் படிக்க | ராஜேஷ் - ரவி இணையும் படத்தின் பூஜை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ