விஜய் இல்லாமல் நடைபெற்ற அவரது மகன் சஞ்சய் படத்தின் பூஜை!

Jason Sanjay: லைகா நிறுவனம் தயாரிப்பில் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

 

1 /5

குறும்படங்களை இயக்கிய விஜய் மகன் சஞ்சய் தற்போது கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.    

2 /5

லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்குனராக உள்ளார். ஆனால், படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.  

3 /5

இந்நிலையில், கடந்த வாரம் இந்த படத்திற்கான பூஜை சென்னையில் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  

4 /5

மேலும், இந்த பூஜையில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றும், படம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.    

5 /5

விஜய் சமீபத்தில் தளபதி 68 படத்திற்காக தாய்லாந்து சென்று சென்னை திரும்பினார்.  சஞ்சய் இயக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது.