நினைத்தாலே இனிக்கும் அப்டேட்: பரிகாரம் செய்ய போன சித்தார்த், பொம்மி.. கோவிலில் உடையும் உண்மைகள்
Ninaithale Inikkum Today`s Episode Update: பரிகாரம் செய்ய போன சித்தார்த், பொம்மி.. கோவிலில் உடையும் உண்மைகள்? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல்.
நினைத்தாலே இனிக்கும் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும்.
ராணியிடம் கோபித்துக்கொள்ளும் சித்தார்த்
இந்த சீரியலில் கடந்த வாரம் ராணி கண் தெரியாமல் நடித்த விஷயம் தெரிய வர சித்தார்த் ராணியிடம் கோபித்து கொண்டு பேசாமல் இருக்க ராணி வருத்தப்படுகிறாள். மேலும் தாத்தாவிடம் பணம் வாங்கி கொண்டு அனாதை ஆசிரமத்துக்கு கிளம்ப இதனை சாவித்திரி பார்த்து விடுகிறாள்.
வீட்டிற்கு வரும் கிருஷ்ணவேணி
அதனை தொடர்ந்து சித்தார்த்த ஆசிரமத்துக்கு வர ராணியும் தாமரையும் மாட்டி கொள்வார்களா என்ற பில்ட் அப் நகர ஒருவழியாக தப்பிக்கிறார்கள். அடுத்ததாக கிருஷ்ணவேணி வீட்டிற்கு வர ராணி கண் தெரியாதது போல நடித்ததால் அவளை அறைகிறாள்.
மேலும் படிக்க | Kamal Haasan: அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்..! எதற்காக தெரியுமா..?
திட்டம் போடும் எதிரிகள் டீம்
அதுமட்டுமில்லாமல் ஊரில் கோவிலில் பரிகாரம் செய்ய வேண்டும் என சித்தார்த் மற்றும் ராணியை அழைத்து செல்கிறாள், கோவிலில் வைத்து இவள் பொம்மி இல்லை என்பதை நிரூபிக்க எதிரிகள் டீம் திட்டம் போடுகிறது.
கோவிலில் ஏற்படும் தடங்கல்களை தாண்டி பொம்மி பொங்கல் வைக்க பூசாரி மீது சாமி வந்து இவள் பொம்மி இல்லை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சாமி வந்தது போல் ஆடும் ராணி
உடனே ராணி தனக்கு சாமி வந்தது போல் ஆடி பூசாரி சொல்வது பொய் என்று சொல்ல குழப்பம் அடைகிறார்கள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் நினைத்தாலே இனிக்கும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்
நினைத்தாலே இனிக்கும்: சீரியலை எங்கு பார்ப்பது?
நினைத்தாலே இனிக்கும் சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி..! விஜய் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்கிறார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ