எழிலுக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோசியர்! சந்தோசத்தில் குதிக்கும் மனோகரி!
Ninaithen Vandhai Today`s Episode Update: ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. சுடர் மீது கோபம் கொண்ட இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் இன்று அனைவரின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. சீரியல் பார்ப்பதைப் பற்றி எவ்வளவு கேலி கிண்டல் செய்தாலும், தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான், ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தேன் வந்தாய்’ மெகா சீரியல்.
நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்துவின் குடும்பத்தை கண்டு பிடித்து விட்டதாக சொல்ல மனோகரி வீட்டிற்கு வர சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வார்டன் வந்து கொண்டிருக்கும் வழியில் மனோகரி ஏற்பாடு செய்த ஆள் ஆக்சிடென்ட் செய்து அவரது போனை எடுத்து போட்டோவை மனோகரிக்கு அனுப்பி வைக்கிறாள். போட்டோவை பார்த்த மனோகரி பேரதிர்ச்சி அடைகிறாள்.
அதிர்ச்சியடைந்த மனோகரி, சுடரை இந்த வீட்டை விட்டு உடனடியாக துரத்தியாகணும் என்று முடிவெடுத்து ஒரு ஏஜென்சிக்கு போன் செய்து சுடர் பேருக்கு உடனடியாக விசா ரெடி பண்ண சொல்கிறாள். சுடர் எதுக்கு எழிலை தொட்டு தொட்டு பேசணும்? இதெல்லாம் சரியே இல்ல என்று சொல்லும் இந்து, கோபத்துடன் தீபாவிடம் பேசி கொண்டிருக்கிறாள்.
இந்த நேரத்தில் அங்கு வரும் சுடர், அவர் இந்து இந்துனு தான் சொல்லிட்டே இருக்காரு, பாவம் என்று சொல்ல இந்து இதை கேட்டதும் அவசப்பட்டு தப்ப பேசிட்டோமே என்று பீல் பண்ணுகிறாள். பிறகு கனகவல்லி ஜோதிடரை வீட்டிற்கு வர வைக்கிறாள்.
மேலும் படிக்க | முழுக்க அரசியல் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது இயக்கத்தில்?
வீட்டிற்கு வந்த ஜோசியர் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து முடித்ததும் கனகவல்லி, எழிலோட ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொல்கிறார். எதுக்கு இதெல்லாம் எழில் கோபப்படுகிறாள். பிறகு ஜோசியர் ஜாதகத்தை பார்த்து எழிலுக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு எழில் ஷாக்காக, மனோகரி சந்தோசப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?
நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | காளி வெங்கட் ஹீரோவாக நடித்து இருக்கும் தோனிமா! இயக்குனர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ