முழுக்க அரசியல் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது இயக்கத்தில்?

Sivakarthikeyan Movie Update: விஜய் சினிமாவை விட்டு விலக உள்ள நிலையில் அவரது இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்து  வருகிறார்.

 

1 /6

தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். அவரது படங்களுக்கு மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  

2 /6

தற்போது சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  

3 /6

ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்று படமாக அமரன் உருவாகிறது. மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்திலும் நடித்து வருகிறார்.  

4 /6

இந்த படங்களில் நடிப்பதற்கு முன்பே ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.  

5 /6

ஆனால் இந்த புராஜெக்ட் நடைபெறவில்லை. தற்போது வெங்கட் பிறகு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி வருகிறார். வரும் செப்டம்பர் மாதம் படம் வெளியாக உள்ளது.  

6 /6

இந்நிலையில் விரைவில் இவர்கள் இருவரும் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், இது முழுக்க முழுக்க அரசியல் சம்பத்தப்பட்ட கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.