Zee Tamil Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடருக்கு எழில் மாப்பிள்ளையாக தெரிய அந்த விஷயத்தை இந்துவிடம் சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, எழில், மனோகரி கல்யாணத்திற்காக அடிக்க கொடுத்து இருந்த பத்திரிக்கை வீட்டிற்கு வர அதை வாங்கிய கனகவல்லி ராமையாவை கூப்பிட்டு பத்திரிக்கையை கொடுத்து பூஜையறையில் வைக்க சொல்கிறாள். மேலும் ஒரு பத்திரிகையை கொண்டு போய் கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து வர சொல்கிறாள். 


ராமையா பத்திரிகையுடன் பூஜையறை நோக்கி செல்ல எதிரே வந்த செல்வி என்ன இது கேட்க ராமையா கல்யாண பத்திரிக்கை என்று சொன்னதும் ஓடி போய் மனோகரியிடம் விஷயத்தை சொல்கிறாள். மனோகரி மிகுந்த எதிர்பார்ப்போடு கல்யாண பத்திரிகையை எடுத்து பார்க்க அதில் அவளது போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோ பிரிண்ட்டாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 


மேலும் படிக்க - நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: தங்கைக்காக வீடு தேடிய கௌதம்.. மதுமிதா செய்த அதிரடி..


இதனால் கோபமடையும் மனோகரி பத்திரிகையை கொண்டு வந்து சுடர் முகத்தில் வீசி எரிந்து என்ன பண்ணி வசிருக்க என்று கோபப்படுகிறாள். மறுபக்கம் ஒரு பத்திரிக்கையை கொண்டு வந்த ராமையா கோவிலில் வைத்து இந்த கல்யாணம் நடக்க கூடாது என்று வேண்டிக் கொள்ள அங்கு வந்த சித்தர் நீ நினைக்கிறது நடக்காது என்று சிரித்து கொண்டே செல்ல ராமையா குழப்பம் அடைகிறான். 


அதன் பிறகு மனோகரி டல்லாக இருப்பதை பார்த்த எழில் என்னாச்சு என்று கேட்க எனக்கு இந்த கல்யாணம் நடக்குமானு சந்தேகமாக இருப்பதாக சொல்ல எழில் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் என்று ஆறுதல் சொல்கிறான். 


அடுத்ததாக இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வர ராமையா ஓடி வந்து எழிலை கீழே கூட்டி செல்ல அவர் உங்க மனைவி இந்து ஆக்சிடென்ட்டில் சாகல.. திட்டமிட்டு தான் கொலை செய்யப்பட்டு இருக்காங்க. அவங்கள கொன்னது இவன் தான் என்று போட்டோவை கொடுக்க எழில் இவனை என் கையால் கொல்லனும் என்று ஆவேசப்படுகிறான். மனோகரி இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - பொது இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிய நடிகர் - நடிகைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ