நினைத்தேன் வந்தாய்: மனோகரிக்கு வந்த மிரட்டல் போன்.. சுடரை கொல்ல துணிந்த ரவுடிகள்
Ninaithen Vandhai Today`s Episode Update: மனோகரிக்கு வந்த மிரட்டல் போன்.. சுடரை கொல்ல துணிந்த ரவுடிகள் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரூம் பாய் தவறவிட்ட போனை எடுத்து வாய்ஸ் சேஞ்சர் ஆப் மூலம் மனோகரியை மிரட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். அதாவது சுடர் நான் சொல்ற இடத்துக்கு பணத்தை எடுத்துட்டு வா என்று சொல்லி மிரட்ட மனோகரி போனை வைத்து விட்டு நம்மள மிரட்டுவது யாராக இருக்கும் என யோசிக்கிறாள். பிறகு அங்கு வந்த கனகவல்லி என்ன யோசனையில் இருக்க என்று கேட்க நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று பணத்துடன் கிளம்பி வருகிறாள்.
அப்போது ரூம் பாய் போன் போட்டு மனோகரிடம் உங்கள கேட்டு என்கிட்ட ஒருத்தர் வந்து இருந்தாங்க நான் எஸ்கேப் ஆகிட்டேன் என்று சொல்ல அப்போ உன் போன்ல இருந்து எனக்கு போன் பண்ணது யாரு என்று கேட்கிறாள். என் போன் மிஸ் ஆயிடுச்சு அந்த பொண்ணு தான் உங்களுக்கு போன் பண்ணி இருக்கா என்று சொல்ல மனோகரி ரவுடிக்கு போன் போட்டு அந்த பொண்ணு வர சொன்ன இடத்திற்குச் சென்று அவளை காலி பண்ணிடு என்று சொல்கிறாள்.
இதையடுத்து ரவுடிகள் அங்கு வர சுடர் நின்று கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகி மனோகரிக்கு போன் செய்து அது இந்து தங்கச்சி சுடர் என்ற விஷயத்தை சொல்ல இன்னும் ஷாக் ஆகிறாள். இதையடுத்து ரவுடிகள் சுடரை கொல்ல துரத்த இதைப் பார்த்த இந்துமதி சுடரை காப்பாற்றுவதற்காக அவளது உடம்புக்குள் புகுந்து ரவுடிகளை அடித்து துரத்துகிறாள்.
பிறகு வீட்டுக்கு வந்த சுடர் மனோகரியை பார்த்து என்ன மனோகரி எப்படி இருக்க என்று கேட்க மனோகரி இவ ஏன் இப்படி பேசிட்டு போறா என்று குழப்பம் அடைகிறாள். இந்துவின் ஆத்மாவுடன் வீட்டுக்குள் நுழைந்த சுடரை பார்த்தேன் அஞ்சலி ட்ராயிங் பண்ணி இருக்கேன் வந்து எப்படி இருக்குனு சொல்லு என்று கூப்பிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ