பிரபல நடிகை நித்யா மேனன் தற்போது மாஸ்டர் பீஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடும்பத்துடன் அமர்ந்து, பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ்  "மாஸ்டர்ஃபீஸ்" டீசரை வெளியிட்டுள்ளது. 


நித்யா மேனன்:


தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த நாயகிகளை விட, கேரளாவை சேர்ந்த மலையாள நாயகிகள்தான் அதிகம். அவர்களில் பலர், தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளுள் ஒருவராக வலம் வருபவர், நித்யா மேனன். இவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் இருந்தே இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவர் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடைசியாக தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது ஷோபனா கதாப்பாத்திரம் பயங்கர ட்ரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து அவர் ‘மாஸ்டர் பீஸ்’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். 


மேலும் படிக்க | விஜய்க்கு துரோகம் செய்த திரிஷா? ஒரு போட்டோவால் சிக்கிக்கொண்ட அவலம்!


மாஸ்டர் பீஸ்..


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "மாஸ்டர்ஃபீஸ்'  சீரிஸில், முன்னணி நட்சத்திரங்களான நித்யா மேனன் மற்றும் ஷரஃப் U தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.



"மாஸ்டர்ஃபீஸ்"  குடும்பத்தோடு ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக  இருக்கும்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும், ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். 


இந்த சீரிஸை சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீஜித் N இயக்கியுள்ளார். மாஸ்டர்ஃபீஸ் சீரிஸ், பற்றிய மற்ற தகவல்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்: எதிர்பாரா பல ட்விஸ்டுகளுடன் இன்றைய எபிசோட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ