H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி அஜித் ரசிகர்களை மட்டுமல்லாது, மற்ற ரசிகர்களையும் அதிகபட்ச எதிர்பார்ப்பில் ஆழ்த்திய தமிழ் படம் தான் 'வலிமை'. இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து பலரும் படக்குழுவினரை வசைபாடி வந்தனர்.  அதனையடுத்து படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதங்கத்தை சற்று அமைதிப்படுத்தியது . தெலுங்கு படத்தில் நாயகனாக நடிக்கும் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.  இந்நிலையில் நடிகர் கார்த்திகேயா வலிமை படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமாரின் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

​​“வலிமை படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் "ராஜா விக்ரமார்கா" படப்பிடிப்பில் இருந்தேன், அப்போதுதான் எனக்கு இந்த படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.  வினோத் மற்றும் அஜித் குமாரின் காம்பினேஷன் உருவாகும் படம் என்பதால் , இவ்வளவு பெரிய குழுவோடா நமக்கு இணைய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்பதை நினைத்து முதலில் நான் ஆச்சரியப்பட்டேன்.   மேலும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தான் என்னை படத்தை நோக்கி இழுத்தது.  நான் ஸ்கிரிப்டைக் கேட்டேன், அப்போது தான் படத்தில் எனது கதாபாத்திரம் எவ்வளவு வலிமையானது? என்பதை உணர்ந்து கொண்டேன். அஜித்துக்கு எதிராக படத்தில் எப்படி போட்டியிட போகிறோம் என்பதையும் கண்டு வியந்தேன்.  அதனால் இந்தப் படத்தின் ஆஃபரை மறுக்க எந்த காரணமும் தோன்றவில்லை.  இந்த படத்தில் அஜித் சார் ஒரு போலீஸ் அதிகாரியாகவும்,  நான் ஒரு குற்றவாளியாகவும் நடிக்கிறேன். மேலும் நடிகர் அஜித் சிறந்த மனவலிமையும், உடல் வலிமையையும் கொண்டவர் என்பதில் மாற்றமில்லை. இந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் கூட சற்று வித்தியாசமானது. 



ஆரம்பத்தில் இந்த படத்தில் கமிட்டாகும்போது எனக்குள் சில பயம் இருந்தத, அதில் முக்கியமான ஒன்று  மொழி பிரச்சனை.  அதுவரை எனக்கு தமிழ் பேசவோ, புரிந்துகொள்ளவோ தெரியாது. அதன் பின்னர்  தமிழ்ப் படங்களைப் பார்க்க ஆரம்பித்து, எனது நண்பர்கள் சிலருடன் அந்த மொழியை கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தேன்.  இப்போது, நான் ஓரளவு தமிழ் பேச கற்று கொண்டுள்ளேன், இப்போது என்னால் கொஞ்சம் பேசவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. 


எனது கதாபாத்திரத்திற்கு நானே டப்பிங் செய்துள்ளேன், அதில் ஏதேனும் சிறு தவறு இருந்தாலும் கூட டப்பிங்கிற்கு வேறு ஆளை பயன்படுத்த சொல்லி H.வினோத் சாரிடம் கூறிவிட்டேன்.  மேலும் அஜித் சாரை  பற்றி பேசும்போதே எனக்குள் உற்சாகம் ஏற்படுகிறது . அவர் பெரிய நடிகர், அறிமுகம் இல்லாதவர் என்பதால் ஆரம்பத்தில் அவருடன் இணங்க பயந்தேன். ஆனால் அவர் என்னை மிகவும் கம்ஃபோர்ட்டாக உணரவைத்தார், அது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தான் ஒரு பெரிய ஹீரோ என்ற கர்வம் இல்லாமல் செட்டில் உள்ள அனைவரையும் சமமாக நடத்தினார் . 



அதோடு அவர் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளார், துப்பாக்கியை எப்படி கையாள்வது ? என்பது குறித்து அஜித்திடம் இருந்து தான் நான் பாடம் எடுத்து கொண்டேன்.  மேலும் படப்பிடிப்பின் போது, அஜீத் சார் துப்பாக்கியை எப்படி கையாள்வார் என்பதை நான் கவனித்தேன், துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில் , தோட்டா வெடித்தால் அது பின்வாங்கும் வகையில் அதை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதையும் அவர் எனக்கு எளிதாக கற்றுக்கொடுத்தார் .  மேலும் இந்தியத் திரையுலகில் முதன்முதலாக சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ஒரு தரமான அதிரடித் திரைப்படம் தான் வலிமை. நான் இன்னும் முழு படத்தையும் பார்க்கவில்லை, அதை முழுமையாக பார்க்க நான் உற்சாகமாக இருக்கிறேன். அதோடு H .வினோத் ஒரு சிறந்த இயக்குனர், அதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கிறது. வலிமை படம் கண்டிப்பாக இந்திய சினிமாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் , ”என்று கார்த்திகேயா கூறியுள்ளார் .


ALSO READ விக்ரமில் கமலின் மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR