விக்ரமில் கமலின் மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?

விக்ரம் படத்தின் Glimpse சில தினங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 11, 2021, 11:18 AM IST
விக்ரமில் கமலின் மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?

இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக கமல்ஹாசன் அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  தனது குருவை இயக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் சிறப்பான விதத்தில் படத்தினை எடுத்து வருகிறார்.  இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது.  மேலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் இருவரும் இணைந்து படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது. 

vikrram

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி விக்ரம் படத்தின் Glimpse வெளியானது.  சிறைச்சாலையில் நடப்பது போல் இருக்கும் அந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.  இது படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.  இந்த Glimpseயில் விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் காட்டப்படவில்லை.  கமல்ஹாசனுக்கு பின்னால் அடையாளம் தெரியாத விதத்தில் காளிதாஸ் மற்றும் நரேன் இடம்பெற்றிருந்தனர்.  இந்நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  கமலும் ஜெயராமும் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்திருந்தனர்.  தற்போது கமலுடன் அதிலும் அவரது பையனாகவே ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கின்றார்.  

vikram

காளிதாஸ் ஜெயராம் தற்போது விக்ரம், ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகருகிறது மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு வெப்சீரிஸ்லும் நடித்துக்கொண்டிருக்கிறார்.  மேலும் விக்ரம் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  விக்ரம் படத்தினைத் தொடர்ந்து இந்தியன்-2 படத்தினை முடித்துவிட்டு, அடுத்தபடியாக பா ரஞ்சித், வெற்றிமாறன் படங்களில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். 

ALSO READ தோட்டாக்கள் தெறிக்க வெளியானது விக்ரம் படத்தின் First Glance!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News