தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்தினை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். மேலும் டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஜோடியாக நடிகை அனுகீர்த்தி வாஸ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை அனுகீர்த்தி வாஸ். தற்போது இவர் இந்த படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.


 



 


ALSO READ | துக்ளக் தர்பாரில் யார் வில்லன்? – விமர்சனம்


இதற்கிடையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேரக்டருக்கு அதிக ஹியூமர் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவருடைய ஸ்டைலிலும் தன்னுடைய ஸ்டைலிலும் கலந்து ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி இந்த படத்தில் தோன்றுவார் என்று ஏற்கனவே இயக்குனர் பொன்ராம் தெரிவித்திருந்தார்.


தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக திகழும் விஜய்சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், அனபெல்லா சேதுபதி படங்கள் வெளியாகின. அடுத்ததாக இவர் நடிப்பில் மாமனுடன், யாதும் ஊரே யாவரும் கேளீர் படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கத்து.


ALSO READ | மகளுடன் நடிக்கமாட்டேன்! விஜய் சேதுபதி அதிரடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR