சிபி சத்யராஜ் நடித்துள்ள ‘வால்டர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யு.அன்பு இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிதுள்ள படம் ‘வால்டர்’. இந்த படத்தில் சிபி சத்யராஜுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்து இருக்கிறார். இவர்களுடன் நட்டி, சமுத்திரக்கனி, பவா.செல்லத்துரை, சார்லி, முனீஷ்காந்த், அபிஷேக், ரித்விகா, சனம் ஷெட்டி, யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


 இப்படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையாகும். இப்படத்தை 11:11 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ஷ்ருதி திலக் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், விக்கி இப்படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்க, தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார். 


இந்நிலையில்  ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.