டிரைலர்- ஓகே கண்மணி இந்தி ரீமேக் ஓகே ஜானு
ஓகே கண்மணி படத்தின் இந்தி ரீமேக் 'ஓகே ஜானு'.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ காதல் கண்மணி'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க கரண் ஜோஹர் மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
தற்போது இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், 2017-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி இப்படம் வெளியாகிறது.