லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.  50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.  2020 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியான மாஸ்டர், இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Beast படபிடிப்புக்காக டெல்லி வந்த தளபதி விஜயின் வீடியோ வைரல்


2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது, குறிப்பாக திரையரங்கு மூடப்பட்டதால் அதனை சார்ந்த அனைத்து குடும்பங்களும் மிகவும் ஏழ்மை நிலைக்கு சென்றன. பின்பு கொஞ்சம் இந்த தொற்று  பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் மத்தியில் கொரோனா பயம் அதிக அளவில் இருந்ததால் திரையரங்கை நோக்கி மக்கள் வரத் தயங்கினர். 



2020 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை.  2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக தேதி தள்ளிப்போனது. அதன்பிறகு ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.  இதற்கிடையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT-யில் வெளியிட அனைத்து நிறுவனங்களும் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தன.  ஆனால் விஜய் இப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாக வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தார்.  



கிட்டதட்ட திரையரங்குகள் திறந்து மூன்று மாதங்களாகியும் மக்கள் கூட்டம் வராததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய பயம் ஏற்பட்டது.  இதே நிலை நீடித்தால், இனி திரையரங்கை மூடுவது தவிர வேறு வழியில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சாகும் நிலையில் இருக்கும் ஒருவருக்கு உயிர் கொடுப்பது போல திரையரங்கிற்கு உயிர் கொடுத்தது விஜய் மாஸ்டர் என்று அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் கூறினார்.  சமீபத்தில் 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் வெளியிட்டனர். அதில் அனைத்திலும் மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருந்தது.  படம் வெளியாகி ஒரு வருடமாகியும் இன்றளவும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல்களும், விஜய்யின் கதாபாத்திரம் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.


ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR