மியாமியில் ஓலித்த ‘ஊ சொல்றியா மாமா’ - சமந்தா ரியாக்ஷன்
மியாமியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ’ஊ சொல்றியா மாமா’ பாடலைக் கேட்டு சமந்தா செம ஹேப்பியில் உள்ளார்.
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மெகா ஹிட் அடித்தது. தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்தது. ஓவர்சீஸ் மார்க்கெட்டிலும் புஷ்பா படம் ஹிட்டானது. திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பை குவித்த இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல் ‘ஊ சொல்றியா மாமா’
மேலும் படிக்க | இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா, வைரல் புகைப்படம்
இப்பாடலுக்கு சமந்தா போட்டா குத்து பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. பாடல் வரிகள் ஒருபுறம், சமந்தாவின் குத்து டான்ஸ் ஒருபுறம் என புஷ்பா படத்துக்கு செம ரீச் கொடுத்தது. ஹீரோயினாக மட்டுமே அறியப்பட்ட சமந்தா, குத்து டான்ஸூடன் கவர்ச்சியிலும் ஊ சொல்றியா மாமா பாடலில் தாராளம் காட்டியிருந்தார். இப்பாடல் குறித்து அண்மையில் பேசிய அவர், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தன்னை வியக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதன்முதலாக இப்பாடலுக்கு நடனமாட வருமாறு அல்லு அர்ஜூன் மற்றும் படத்தின் இயக்குநர் அழைத்தபோது, அதில் விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும், அல்லு அர்ஜூனின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இப்பாடல் வெளியாகி ஹிட் அடித்த பின்னர், ரசிகர்கள் எங்கு சென்றாலும் ஊ சொல்றியா மாமா பாடலை வைத்து தன்னை அடையாளப்படுத்துவதாகவும் சமந்தா கூறியிருந்தார். இது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், மியாமி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கிடைத்த வரவேற்பை வீடியோவாக பதிவு செய்த ரசிகர் ஒருவர் அதனை சமந்தாவுக்கு டேக் செய்திருந்தார். அதில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவைப் பார்த்து வாயடைத்துப்போன சமந்தா, நிஜமா இது மியாமியா? என ஷிமிலியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் அழகாய் நடந்த நிச்சயதார்த்தம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR