சமீபத்தில் நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி காதலித்து வருவதாக இணையத்தில் கிசுகிசு வந்தது. இவர்கள் இருவரும் யாகவராயினும், மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது.
ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அவர்களிடையேயான நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது இருவரும் இல்லை என்று மறுக்கவில்லை.
மேலும் படிக்க | இணையத்தில் கசிந்த RRR படம், HD பிரிண்ட்டால் அதிர்ச்சியான படக்குழு
இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக நிக்கி கல்ராணியும் ஆதியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இன்ப அதிர்ச்சியளித்துள்ளனர். மார்ச் 24ஆம் தேதி நிச்சயதார்த்தம் நிகழ்ந்த நிலையில் இன்றுதான் இருவரும் தங்களது புகைபடங்களுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
The best thing to hold onto in life is each other.
We found each other a couple of years ago & it’s official now
24.3.22 was really special to us.
We got engaged in the presence of both our families
Seeking all you love & blessings as we take on this new journey together pic.twitter.com/hrMbxieCAn— Nikki Galrani (@nikkigalrani) March 26, 2022
இவர்களது நிச்சயதார்த்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நிக்கி கல்ராணியின் இடியட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்து வரும் இவர்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ‘பான் இந்தியா’வுக்குப் பெருமை சேர்த்ததா RRR?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR