Oscar Awards: பல்வேறு துறைகளைச் சேர்ந்த திரைப்படத் துறையில் உள்ள கலைஞர்களின் கலை மற்றும் தொழில்நுட்பத் தகுதியை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க விருது தான் இந்த ஆஸ்கார் விருது.  இது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கும் வருடாந்திர விருது ஆகும்.  ஆஸ்கார் விருதுகள் 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இருப்பினும் ஆஸ்கார் விருது எனப்படும் இந்த தங்க முலாம் பூசப்பட்ட சிலையை வழங்கும் போக்கு 1929ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் தான் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுகிறது.  திரைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு இது முக்கியமான விருதாக கருதப்படுகிறது.  இந்த விருதின் மூலம் உலக அளவில் சிறந்த திறமையாளர்களை அங்கீகரித்து, பின்னர் சிறந்த வேலை வாய்ப்புகள், ஊதிய உயர்வுகள் மற்றும் உலகளாவிய ஊடக அங்கீகாரம் போன்றவை வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  இப்போது இதுவரையில் ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்தியர்களின் பட்டியலை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) பானு அத்தையா:


இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருது பெற்ற முதல் நபர் பானு அத்தையா, இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.  இவர் 1982 ஆம் ஆண்டு காந்தி என்ற வரலாற்று திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்றார்.  பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் உள்ள பிரபலங்களுக்கும் இவர் சிறப்பாக ஆடை வடிவமைத்து இருக்கிறார்.


மேலும் படிக்க: Oscar Nominations 2023: ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல்.. எப்போ? எங்கே? எப்படி?


2) சத்யஜித் ரே:


இந்திய சினிமாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட ஒருவர் தான் சத்யஜித் ரே.  உலக அளவில் திரைப்படம் எடுக்கும் மாணவர்களால் அவரது படைப்புகள் கேஸ் ஸ்டடிகளாக ஆய்வு செய்யப்படுகின்றன.  இந்திய மற்றும் பெங்காலி சினிமாவிற்கு நிறைய பங்களித்து இருக்கிறார்.  இவரது முதல் திட்டம் 'பதேர் பாஞ்சாலி', இது 1955-ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனித ஆவணம் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச பாராட்டுகளைப் பெற்றது.  1992-ல், இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.


3) ரசூல் பூக்குட்டி:


81வது ஆஸ்கார் விருது விழாவில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிக்கலவைக்கான விருதை வென்றார்.  இவர் இயன் டாப் மற்றும் ரிச்சர்ட் ப்ரைக் ஆகியோருடன் இணைந்து இந்த ஆஸ்கார் விருதை வென்றார். 


4) ஏ.ஆர்.ரஹ்மான்:


81வது ஆஸ்கார் விருதுகளில் டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லியனர் பல பிரிவுகளில் விருதுகளை வென்று குவித்து இந்தியாவை பெருமைப்படுத்தியது.  பிரிட்டிஷ்-இந்திய திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதுகளில் 3 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றார்.  இதில் அவருக்கு இசைக்காக ஒரு விருதும், ஜெய் ஹோ பாடலுக்கா மற்றொரு விருதும் வழங்கப்பட்டது.


5) குல்சார்:


இந்தியாவின் சிறப்பான பாடல்களில் ஒன்றாக கருதப்படும் 'ஜெய் ஹோ' பாடல் 81வது அகாடமி விருதுகளில் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு விருது பெற்றது.  இந்த பிரபலமான பாடலுக்கு வரிகளை அமைத்து கொடுத்த பிரபல பாடலாசிரியர் குல்சார் ஆஸ்கார் விருதை வென்றார்.


6) கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா:


கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்காவின் நெட்ஃபிக்ஸ் டாக்குமெண்டரி குறும்படமான  'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்', 95வது அகாடமி விருதுகளில் சிறந்த டாக்குமெண்டரி குறும்பட வகைக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.  இந்த விருதினை பெற்று போட்டி ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.


7) ஆர்ஆர்ஆர் - நாட்டு நாட்டு பாடல்:


'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் 95-வது அகாடமி விருதுகளில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.  இந்த பாடல் எம்.எம்.கீரவாணியால் இசையமைக்கப்பட்டது, இப்பாடலுக்கான பாடல் வரிகளை சந்திரபோஸ் எழுதியுள்ளார்.


மேலும் படிக்க: ஆஸ்கரில் வரலாறு படைத்த 'நாட்டு நாட்டு' பாடல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ