Other Language Films Huge Hits Tamil Nadu 2024 : 2024ல், பல்வேறு திரைப்படஙகள் தமிழகத்தில் வெளியாகின. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் படமாக இருந்தாலும், பிற மொழி படங்களும் தமிழ்நாட்டில் காலூன்றின. அப்படி, தமிழக மக்களை ஈர்த்த பிறமொழி படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.பிரேமலு:


மலையாளத்தில் உருவாகி, தமிழகத்தில் இந்த ஆண்டு நல்ல வசூலை பெற்ற படங்களுள் ஒன்று பிரேமலு. சாதாரண இளம் வாலிபனின் காதலை கூறும் வகையில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் நஸ்லேன் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். இந்த ஒரு படம், இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து நடிகர்களின் மார்கெட்டையும் உயர்த்தி விட்டது. சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம், உலகளவில் மொத்தம் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்தது.



தமிழகத்தில் சாதாரணமாகவே மலையாள படங்களை ரசிப்பவர்கள் உண்டு. அவர்களுக்கு மட்டுமன்றி, இளைஞர்கள் பலருக்கும் இப்படம் பிடித்திருந்ததால் தமிழகத்தில் இப்படம் சுமார் ரூ.10 கோடி வரை கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது.


2.மஞ்சுமெல் பாய்ஸ்:


இந்த வருடம், நல்ல தியேட்டர் அனுபவத்தை கொடுத்த படங்களுள் ஒன்றாக இருந்தது, மஞ்சுமெல் பாய்ஸ். பலர், இந்த படத்தை நண்பர்களுடன் பார்த்து மகிழும் ஜாலியான படம் என்று நினைத்து தியேட்டருக்கு சென்று விட்டனர். ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது, இது ஒரு சர்வைவல் த்ரில்லர் படம் என்று. 2006ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கொச்சியில் இருந்து ஊட்டிக்கு டூர் வந்த 11 நண்பர்கள், குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிகளை போய் ஆராய்கின்றனர். அப்போது அந்த நண்பர்களுள் ஒருவர் ஆழமான குகைக்குள் விழுந்து விடுவார். இவரை எப்படி உயிருடன் மீட்டனர் என்பதைத்தான் இந்த படத்தில் காண்பித்துள்ளனர்.



இந்த படம், வெற்றி பெற்றதற்கு பெரிய காரணம், இதில் தமிழ் மக்களையும் தமிழையும் உபயோகித்திருப்பர். “கண்மணி அன்பாேடு காதலன்” பாடல் மீண்டும் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்ததற்கு காரணமும் இந்த படம்தான். இப்படம் உலகளவில் 243 கோடியை தாண்டி வசூலித்தது. அதில் தமிழ் நாட்டில் மட்டும் 54 கோடிக்கும் மேல் வசூலித்தது.


3.ஆவேஷம்: 


இந்த ஆண்டில் மக்களின் கவனத்தை ஈர்த்த இன்னொரு மலையாள படம், ஆவேஷம். இந்த படத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடித்திருந்தார். ஏப்ரல் மாதத்தில் வெளியான இந்த படம், உலகளவில் சுமார் ரூ.152 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருக்கிறது.



4.ஆடு ஜீவிதம்: 


பிருத்விராஜ் நடிப்பில் உருவான படம், ஆடு ஜீவிதம். இந்த படம், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படமாக இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், உலகளவில் சுமார் ரூ.160 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் மட்டும் 8 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. 



மேலும் படிக்க | 2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?


5.புஷ்பா 2: 


அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம், இதுவரை இந்திய படங்கள் நிகழ்த்தாத சாதனைகளை எல்லாம் நிகழ்த்தி வருகிறது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகி 22 நாட்கள் ஆகியிருக்கும் நிலையிலும், பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்போது வரை உலகளவில் இப்படம் ரூ.1,650 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 55 கோடி வசூலை தாண்டியுள்ளதாம்.



6.முஃபாசா: தி லயன் கிங்: 


குழந்தைகளுக்கு பிடித்த கதைகளுள் ஒன்று, தி லயன் கிங். இந்த படத்தில் வந்த முஃபாசாவின் கதையை படமாக எடுத்து, சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.



தமிழில் முஃபாசாவிற்கு அர்ஜுன் தாஸ் வாய்ஸ் கொடுத்திருந்தார். இதை கேட்பதற்காகவே பலர் தியேட்டருக்கு சென்றனர். தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.6 கோடி வரை கலெக்ட் செய்திருக்கிறதாம். 


மேலும் படிக்க | 2024-ன் டாப் 3 தியேட்டர் ப்ளாக் பஸ்டர் படங்கள்!! நம்பர் 1 இடத்தில் எந்த படம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ