நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ 5 போன்ற பல ஓடிடி தளங்கள் இந்த காலத்தில் வந்துவிட்டன. இப்போதெல்லாம் திரையரங்கில் படங்கள் வெளியான சில நாட்களிலேயே ஓடிடி தளங்களிலும் வெளியாகின்றன. அப்படி, இந்த வாரம் வெளியாகவுள்ல படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குலசாமி: 


விமல் ஹீரோவாக நடித்திருந்த படம் குலசாமி. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையினை அடிப்படையாக வைத்த் இந்த படம் வெளியானது. இதில் விமல், தனது வெறிப்பிடித்த நடிப்பால் பலரின் கவனத்தினை ஈர்த்தார். இந்த படம், டெண்ட்கொட்டா தளத்தில் வரும் 23ஆம் தேதி வெளியாகின்றது. 


கருங்காப்பியம்: 


சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள கதை, கருங்காப்பியம். இதில், காஜல் அகர்வால், ஜனனி, ஈரானிய, நொய்ரிகா என 4 நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம், நாளை மறுநாள் (ஜூன் 23) சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகின்றது. 


மேலும் படிக்க | ஆபாச மெசேஜ்.. கொலை மிரட்டல்..! சின்னத்திரை நடிகை ரக்‌ஷிதா கணவர் மீது பரபரப்பு புகார்


கழுவேத்தி மூர்க்கன்:


அருள்நிதி நடிப்பில் வெளிவந்த படம், கழுவேர்த்தி மூர்க்கன். வெளியான சில நாட்களுக்குள்ளாகவே பலவித சாதிய ரீதியான பிரச்சனைகளை இந்த படம் சந்தித்தது. இதில் நாயகியாக சார்பட்டா புகழ் துசாரா விஜயன் நடித்திருந்தார். சந்தோஷ் பிரதாப், ஷரத் லோஹித்ஷ்நா, யார் கன்னன் போன்ற பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தனர். இந்த படம், அமேசான் ஓடிடி தளத்தில் வரும் 23அன்று வெளியாகவுள்ளது.


திரிஷாங்கு:


பிரபல மலையாள நடிகை ஆன பென் நடித்துள்ள பட்ம், த்ரிஷாங்கு. இந்த படம், ஜூன் 23ஆம் தேதி பிரபல ஓடிடி  தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகின்றது. 


ஆசெக்:


இது பேய் பட விரும்பிகளுக்கான படம். சமீபத்தில் பெரிதாக விரிவாக்கப்பட்ட ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இப்படம் வரும் ஜூன் 23 அன்று வெளியாகவுள்ளது. இதில், சோனாலில் செய்கலி, வர்தன் புரி, சித்தந்த் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இண்டிண்டி ராமாயனம்: 


நாக வம்சி நடிப்பில் இயக்குநர் மாருதி இயக்கியுள்ள படம், இண்டிண்டி ராமாயணம். தெலுங்கு மொழி படமான இது, ஆஹா ஓடிடி தளத்தில் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


மல்லி பெல்லி: 


நடிகர்கள் நரேஷ், பவித்ரா லோகேஷ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ள படம், மல்லி பெல்லி. காதல் படமாக உருவாகியுள்ள இது, தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம், அமேசான் வீடியோ தளத்தில் நாளை மறுநாள் (ஜூன் 23) வெளியாகிறது. 


கேரளா க்ரைம் ஃபைல்ஸ்: 


த்ரில்லர் பட விரும்பிகளே! ரெடியா. இது உங்களுக்கான தொடர். கேரளா க்ரைம் ஃபைல்ஸ் எனும் பெயரில் எடுக்கபப்ட்டுள்ள இந்த தொடர், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் 23ஆம் தேதியன்று வெளியாகிறது. இதற்கான ஸ்பெஷல் ஸ்க்ரினிங் நடைப்பெற்றது, இதை பார்த்தவர்கள் நல்ல விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். 


கிசி கி பாய் கிசி கி ஜான்:


அஜித் நடிப்பில் வெளியாகி தமிழில் மாபெறும் வெற்றி பெற்ற பட வீரம். இதன் ரீ-மேக்தான் கிசி கி பாய் கிசி கி ஜான். இதில், ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்திருந்தார். தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்தார். பிரபல நாயகி பூஜா ஹெக்டே படத்தின் நாயகியாக நடித்திருந்தார். 


பிற படங்கள்:


மேற்கூறிய படங்கள் மற்றும் தொடர்களை தவிர இன்னும் சில படைப்புகளும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் அவற்றை எந்தெந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை காண்போமா? 


கஃபாஸ், இந்தி-சோனி லைவ்
ஃப்லைஓவர்-பெங்காளி-அட்டா
மேக் மி பிலீவ்-டர்கிஷ்-நெட்ஃப்ளிக்ஸ்
பாப்கார்ன்-தெலுங்கு-சிம்ப்ளி சவுத்
சோசியல் கரன்ஸி-இந்தி-நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ்
சீக்ரெட் இன்வேஷன்-ஆங்கிலம்-டிஸ்னி ஹாட்ஸ்டார்


மேலும்  படிக்க | ’வேற மாறி வேற மாறி..’ ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனிற்கு பிறந்தநாள் இன்று..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ