அண்மையில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் தோழா, மகேஷ் பாபு நடிப்பில் மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி. ஆனால் அவர் இதுவரை மிக சில படங்களையே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும் அவர் இயக்கத்தில் தேழா, மஹரிஷி படங்களே பெயர் சொல்லப்பட்டது என்றும் மீதி 4 படங்களும் சற்று சுமார் என்பதுபோலும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சிலர் கருத்துகளை கூறிவருகின்றனர்.


இதன் காரணமாக நடிகர் விஜய் நல்ல கதை அம்சம் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் எழுகின்றது.


மேலும் படிக்க | BSNL Recharge plan: 80 ஜிபி டேட்டா மற்றும் 80 நாட்கள் வேலிடிடி ரூ 399 ரீசார்ஜ் ப்ளான்


மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.


அதன்படி, இப்படத்தின் டைடில் "வாரிசு" என்ற அறிவிப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள விஜய்யின் புதிய கோட் சூட் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வளைதளங்களில் வைரல் ஆக்கி மகிழ்ந்தனர்.


ஆனால் சில மணி நேரங்களில் அவரது புகைப்படத்தை "ஓட்டோ" விளம்பர புகைப்படத்தோடு ஒப்பிட்டு சிலர் பதிவிட்டு கலாய்த்தும் வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் என அனைத்திலும் விஜய் சம்பந்தப்பட்ட பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


இதற்கிடையில் இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட ஓட்டோ நிறுவனமே களம் இறங்கியுள்ளது. இந்த புகைப்பட ஒப்பீட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டோ நிறுவனம் பதிவிட்டு, "போலியாக மற்றொருவரின் உழைப்பை திருடுவதை எங்கள் நிறுவனம் ஒருபோதும் பொருத்துக்கொள்ளாது. விஜய்யின் 'வாரிசு' போஸ்டரில் வருவது போல் ஓட்டோ நிறுவனம் எந்த புகைப்பட விளம்பரத்தையும் தயாரிக்கவில்லை. 'வாரிசு' போஸ்டருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விஜய்யின் 'வாரிசு' படத்தின் தயாரிப்பு குழுவுக்கு எங்கள் நிறுவனம் சார்பில் வெற்றிபெற வாழ்த்துக்கள்." என பதிவிட்டுள்ளது.


 



ஓட்டோ நிறுவனத்தின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | SBI ATM: பணம் எடுப்பதற்கான கட்டணங்களில் மாற்றம், முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR