பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி பிரலமான சாய் பல்லவி நடித்து ஜூன் 17ஆம் தேதி வெளியான படம் விராட பருவம். இப்படத்தில் அவர் நக்சல் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படமும், சாய் பல்லவியின் நடிப்பும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி அளித்த சாய் பல்லவி, “நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தவள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யார் சரி, யார் தவறு என்று சொல்ல முடியாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் காஷ்மீரி பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டுகிறது. 



சமீபத்தில், பசுவை கொண்டு சென்ற நபர் ஒருவர் இஸ்லாமியர் என சந்தேகப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பினர். காஷ்மீரில் நடந்ததற்கும் சமீபத்தில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம்” என கேள்வி எழுப்பியிருந்தார்.


சாய் பல்லவியின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்தது. மேலும் அவரை கைது செய்ய வேண்டுமெனவும் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டது.


மேலும் படிக்க | விஜய் படத்துக்காக பாலிவுட் வாய்ப்பை இழந்த நெல்சன் திலீப்குமார்


இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“சில தினங்களுக்கு முன்பு நான் தெரிவித்த கருத்து சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒன்று என்பதைத்தான் பேட்டியில் தெரிவித்தேன். 


என்னை பொறுத்தவரை ஒரு மருத்துவ பட்டதாரியாக, எந்த உயிரையும் இனம், மதம், சாதி, கலாசாரம், மொழி ரீதியாக பிரித்து பார்க்க கூடாது. எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்றுதான். 


 



இந்நிலையில் நடிகை சாய் பல்லவிக்கு இயக்குநர் பா. இரஞ்சித் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் 'விரத பர்வம்'. 


மேலும் படிக்க | ஆயிரத்தில் ஒருவனா; புதுப்பேட்டையா?.. எதன் இரண்டாம் பாகம் முதலில் - செல்வராகவன் அளித்த பதில்


இயக்குநர் வேணு உடுகுலா, எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராணா டகுபதிக்கு சிறப்பு பாராட்டுகள். சாய்பல்லவி சிறப்பாக நடித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR