பாவக்கதைகள் trailer வெளியானது: விரைவில் Netflix-ல் ரிலீஸ்!!
பாவக்கதைகள் சமுதாயத்தின் பல பாவச்செயல்களை பட்டியலிட்டுக் காட்டுமா? பரிகாரங்களுக்கு வழி கூறுமா? படம் வெளிவர காத்திருக்கிறது ரசிகர் உலகம்.
கொரோனா காலம் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மாற்றியுள்ளது. திரைத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. திரை அரங்குகளுக்கு பதிலாக படங்கள் OTT தளங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீப காலங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘பாவக்கதைகள்’.
Netflix தளத்தில் வெளியாகவுள்ள பாவக்கதைகள் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
படத்தின் தலைப்பைப் போலவே இந்த படத்தின் உருவாக்கத்திலும் பல வித்தியாசங்கள் உள்ளன. சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் (Gautham Menon) ஆகிய நான்கு இயக்குநர்கள் ஒன்றிணைந்து பாவக்கதைகள் படத்தை உருவாக்கியுள்ளார்கள். படத்தில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன.
சிம்ரன், பிரகாஷ் ராஜ் (Prakash Raj), சாய் பல்லவி, அஞ்சலி, கௌதம் மேனன், ஷாந்தனு பாக்யராஜ், பவானி ஸ்ரீ, ஹரி, காளிதாஸ் ஜெயராம், கல்கி போன்ற நடிகர்களின் அசத்தலான நடிப்பில் வெளிவரவுள்ளது பாவக்கதைகள்.
பாவக்கதைகள் டிசம்பர் 18 அன்று வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரெய்லரைப் பார்க்கும்போது, வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை இப்படம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்பதை ஊகிக்க முடிகிறது. கௌரவத்தின் பெயரில் நடக்கும் கொடூரங்களையும் மக்கள் முன் கொண்டு வரும் வகையில் இப்படம் இருக்கக்கூடும்.
டிரெய்லரில் (Trailer) வரும் காட்சிகளின் மூலம் படத்தில் நல்ல நடிப்புக்கு பஞ்சம் இல்லை என்பது புரிகிறது. ஒவ்வொரும் அவரவரது கதாபாத்திரத்துக்கு ஏற்ற அளவு நடித்திருக்கிறார்கள். மிகைப்படுத்தலை எங்கும் காண முடியவில்லை. படம் வெளிவந்தால்தான் முழு நிலவரம் தெரியும்.
ALSO READ: KGF 2: Yash-இன் teaser இந்த தேதியில் வெளியாகுமா?
“நாடு முழுவதும் நடந்துள்ள சில கொடூரமான நிகழ்வுகளை நாங்கள் இதில் பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம். தேவையற்ற கௌரவமும், பெருமையும் மனித உறவுகளுக்குள் உள்ள அன்பையும் பாசத்தையும் எப்படி கொலை செய்கிறது என்பதைச் சுற்றி இந்த பாவக்கதைகள் நகர்கின்றன. படம் வெளி வந்தவுடன், உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வொரு கதையையும் நிஜ வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” என்றார் பாவக்கதைகளின் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன்.
ஜாதி, மதம் என வழக்கமான கௌரவப் பிரச்சனைகளைத் தவிர மற்றொரு முக்கியமான, இதுவரை தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படாத ஒரு சாராரைப் பற்றியும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளது.
பாவக்கதைகள் சமுதாயத்தின் பல பாவச்செயல்களை பட்டியலிட்டுக் காட்டுமா? பரிகாரங்களுக்கு வழி கூறுமா? படம் வெளிவர காத்திருக்கிறது ரசிகர் உலகம்.
ALSO READ: பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் first look poster வெளியானது: ரசிகர்கள் ஆரவாரம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR