விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. தமிழிலேயே உருவான இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது, தமிழில் நல்ல டிஆர்பியுடன் இன்னும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் இந்த சீரியலை பல இல்லத்தரசிகள் விரும்பி பார்த்து வந்தாலும் நெட்டிசன்கள் பலரும் இந்த சீரியலை ஒருபக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்போது கதையில் வரும் அண்ணன்-தம்பிகள், இத்தனை வருஷம் சேர்ந்து கூட்டு குடும்பம் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று காட்டிவிட்டு இப்போது மனக்கசப்புடன் பிரிந்து இருக்கின்றனர். பிரிந்த அண்ணன்-தம்பிகள் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து சரவணன் (பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன்) விலக போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விஜே தீபிகா வெளியிட்ட புகைப்படத்தின் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தியாக நடித்து வரும் நவீன் வெற்றியுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து, ’சுவாரஸ்யமான ஒன்று வரவிருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | சமந்தா, ராஷ்மிகாவை விட அதிகளவில் சம்பளம் வாங்கும் புதிய நடிகை!


இதற்கிடையே தற்போது நடிகர் சரவண விக்ரமுக்கு பல பட வாய்ப்புகள் வந்திருப்பதால், அவர் சீரியலை விட்டு விலகியிருப்பதாகவும், அவருக்கு பதில் இனி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் நவீன், கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.



முன்னதாக கடந்த மாதம் சாய் காயத்திரி திடீரென்று இந்த சீரியலில் இல்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு நடிகை வரப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. அந்தவகையில் இந்த கேரக்டரில் ஏற்கனவே ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் முதல் விடுதலை வரை! OTT ரிலீஸ் தேதி முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ