பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மாற்றப்பட்ட மற்றொரு நாயகி

பாண்டியன் ஸ்டோரேஸ் சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 6, 2022, 03:12 PM IST
  • இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு புது நடிகை.
  • இனி இவருக்கு பதில் இவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மாற்றப்பட்ட மற்றொரு நாயகி title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் அண்ணன் தம்பிகள் தற்போது பண பிரச்சனை காரணமாக கதிர், முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார், னியாக இருந்த முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வென்று தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். இதை அறிந்த மீனாவின் அப்பா கிண்டல் கேலி செய்கிறார். இதனால் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

சண்டை வளந்துக் கொண்டே போனதால் ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வந்து கதிரின் வீட்டிற்கு செல்கிறார்கள். பின்னர் மூர்த்தியின் மொத்த குடும்பமும் தாங்கள் வீடு கட்டும் இடத்தை ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்கள். மேலும், குடும்பம் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: தலைவர் பதவிக்கு போட்டா போட்டி, இப்படி ஒரு டாஸ்க் ஆ..

இந்த நிலையில் திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மீனாவின் தங்கையாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாறியுள்ளார். அதன்படி ஐஸ்வர்யா தான் அவருக்கு பதில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்புதான் தற்போது வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யாவும் ஏற்கனவே நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தமிழ் தொலைக்காட்சி ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு; நவம்பர் முதல் டிவி இல் Blacksheep

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News