சமந்தா, ராஷ்மிகாவை விட அதிகளவில் சம்பளம் வாங்கும் புதிய நடிகை!

தெலுங்கில் சமந்தா மற்றும் ராஷ்மிகா ரூ.5 கோடி சம்பளம் பெற்றுவரும் நிலையில் 'சீதா ராமம்' மூலம் பிரபலமான நடிகை மிருணல் தாகூருக்கு 'நானி 30' படத்தில் நடிக்க ரூ.6 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 19, 2023, 09:11 PM IST
  • 'சீதா ராமம்' மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் பிரபலமானவர் நடிகை மிருணல் தாகூர்.
  • 'நானி 30' படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணல் தாகூர் ஒப்பந்தமாகியுள்ளார்.
  • 'நானி 30' படத்திற்காக மிருணல் தாகூருக்கு ரூ.6 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
சமந்தா, ராஷ்மிகாவை விட அதிகளவில் சம்பளம் வாங்கும் புதிய நடிகை! title=

தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு சமமாக பல முன்னணி நடிகைகளும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.  நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா போன்ற நடிகைகள் அதிகளவில் சம்பளம் பெற்று வருகின்றனர்.  பொதுவாக பல வெற்றி படங்களில் நடித்த நடிகைகளுக்கு தான் அதிகளவில் சம்பளம் கொடுத்து பார்த்திருப்போம், ஆனால் இங்கு ஒரு படத்தில் நடித்து பிரபலமான நடிகைக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை மிருணல் தாகூர்.  இதற்கு முன்னர் இவர் 'இருமலர்கள்' எனும் தொடரில் 'அம்மு' எனும் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதையும் களவாடிய நிலையில் 'சீதா ராமம்' படத்தின் மூலம் சீதா மகாலெட்சுமியாகவும், நூர்ஜகானாகவும் நடித்து கலக்கியிருந்தார்.  இந்த பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் ராஷ்மிகா மந்தனாவும்  ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.   

மேலும் படிக்க: அடங்கேப்பா... ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காதல் கதையில் நடிகை மிருணல் தாகூர் இளவரசி நூர்ஜஹானாக நடித்திருந்தார்.  இளவரசியான இவர் துல்கர் சல்மானுக்காக சாதாரண ஒரு நடன ஆசிரியர் சீதா மகாலட்சுமியாக நடித்திருப்பார், காதலுக்காக தனது ராஜ்யத்தையே விட்டு வந்த கடைசி வரை காதலுனுக்காக காத்திருக்கும் அந்த சீதா மகாலட்சுமியின் கதாபாத்திரம் காண்போரை கண்கலங்க செய்தது.  பலரின் பேவரைட் லிஸ்டில் இருக்கும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை இப்போது பார்த்தாலும் கூட நமது கண்களிலிருந்து கண்ணீர் பெருகிவிடும், அந்த அளவிற்கு இந்த படம் பலரின் மனதை வருடியது.  இதில் மிருணல் தாகூரின் நடிப்பு அனைவரிடையேயும் பாராட்டுக்களை பெற்றது.  இப்படத்தால் அவரது மார்க்கெட் பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களுக்கு உயர்ந்துள்ளது.

தற்போது நடிகை மிருணல் தாகூர், நானியின் 30-வது படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  'சீதா ராமம்' படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இந்த படத்தில் மூன்று மடங்கு அதிகமாக அதாவது ரூ.6 கோடி வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்த செய்தி தெலுங்கு திரையுலகினரை மட்டுமின்றி பல முன்னணி நடிகைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  டோலிவுட்டின் இரண்டு முன்னணி கதாநாயகிகளான சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு சுமார் ரூ.5 கோடி பெறுகிறார்கள்.  அப்படி இருக்கையில், ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகை மிருணல் தாகூர் 'நானி 30' படத்திற்காக மற்ற நடிகைகளை விட ஒரு கோடி அதிகம் பெற்றிருப்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க | முதன்முறையாக கமலுடன் நடிக்கும் நயன்தாரா! அதுவும் இந்த படத்திலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News